மண்முனைப்பற்று பிரதேச சபையினால்(ஆரையம்பதி) நடாத்தப்பட்ட கணணிக்கல்வி பயிற்சி நெறியின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டு பயிற்சி பெற்ற மாணவர்களக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று(02.04.2011) பிரதேச சபையின் தவிசாளர் திருமதி மேரி கிறிஸ்ரினா சசிதரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமி;ழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பூ. பிரசாந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
0 commentaires :
Post a Comment