4/03/2011

இந்தியா சாம்பியன்


இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பந்தை பவுண்டரிக்கு விளாசும் இந்திய கேப்டன் தோனி.
மும்பை, ஏப். 2: ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் 2-வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியின் கெüதம் கம்பீர் அபாரமாக விளையாடி 97 ரன்களும், கேப்டன் தோனி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் எடுத்து வெற்றி தேடித் தந்தனர்.
1983-ல் கபில் தேவ் தலைமையிலான அணி வென்றதற்குப் பின் 2-வது முறையாக தோனி தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையைப் படைத்துள்ளது.

0 commentaires :

Post a Comment