4/01/2011

லிபிய வெளிநாட்டமைச்சர் பிரிட்டனில் இரகசிய பேச்சு கடாபியை விட்டு படிப்படியாக உயரதிகாரிகள் விலகல்

லிபிய வெளிநாட்டமைச்சர் முஸாகுஸா பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் புறப்பட்டுள்ளார்.
முஅம்மர் கடாபியின் இராணுவம் தரை மார்க்கமான போரில் முன்னேறி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டு இடங்களை மீளக்கைப் பற்றினர்.
இதனாலுண்டான களநிலவர மாற்றங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் விளக்கிய லிபிய வெளிநாட்டமைச்சர், லிபியாவின் உள்விவகாரங்களில் பிரிட்டன் போதிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாக லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் டுனிஷியாவில் தங்கிய லிபிய வெளிநாட்டமைச்சர் அங்கிருந்தவாறு லண்டன் பயணமானார்.
இவரின் விஜயம் தனிப்பட்டதென்று என முன்னர் அறிவித்த லிபியா பின்னர் உத்தியோகபூர்வ விஜயம் என அறிவித்தது. முஅம்மர் கடாபியின் நீண்டகால ஆட்சியில் அமைச்சராக இருந்த முஸாகுஸா லண்டன் வந்தமை முஅம்மர் கடாபியின் இராணுவத்துக்குப் பெரும் தலைகுனிவு என அவதானிகள் தெரிவிக்கின்றனர். கடாபியின் நிர்வாகத்தில் குறைபாடுகள் உள்ளதாகவும் இதனால் பதவி விலகுவதாகவும் லண்டனில் முஸாகுஸா அறிவித்தார்.
இதேபோல கடாபியின் இன்னும்சில அமைச்சர்கள் பாரிய அதிருப்தியுடன் உள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. லிபியாவில் புரட்சி ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே அமைச்சர்கள் அதிபர் முஅம்மர் கடாபியின் நடவடிக்கைகளில் அதிருப்தியுடனிருந்ததாகவும் தெரியவருகிறது.
59 வயதான லிபிய வெளிநாட்டமைச்சர் முஸாகுஸா 1994ம் ஆண்டிலிருந்த லிபியாவின் உளவுத் துறைக்கு பொறுப்பாக இருந்தவர்.

0 commentaires :

Post a Comment