.
வெருகல் படுகொலை - 7 வது ஆண்டு நினைவு தினம்
கரி நாள் ஏப்ரல் 10.
அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு மண்ணின் மீது வன்னிப்புலிகள் தமது காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்றியநாள். ஆயுதம் தாங்கிய பிரபாகரனின் ஏவலாளிகள் கிழக்கு மாகாணத்துக்குள் புகுந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய 210 போராளிகளை கொன்று வீசிய நாள். பெண்போராளிகளை மானபங்கம் செய்து குற்றுயிராக்கி கொலைவெறியாடிய நாள். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 நாள் இந்தபடுகொலையை நிறைவேற்றியதன் ஊடாக எந்தவரலாற்றின் தொடக்கத்தைக் கட்டிப்போட வன்னிப்புலிகள் முயன்றனரோ அந்த வரலாறு இன்று நிமிர்ந்து நிற்கிறது. அன்று கொன்று வீசப்பட்ட கிழக்கு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அந்த கொடிய நாளை கரிநாளாக அனுஸ்டிக்கும் கிழக்குமாகாண மக்களுடன் எமது முன்னணியும் கரம்கோர்த்துக் கொள்கிறது.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
10-04-2011
kilakku@hotmail.com
0 commentaires :
Post a Comment