கிழக்கு மாகாண சபையின் அனுசரணையுடன் யுத்தம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று காலை வழங்கிவைத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக நெக்டெப் நிறுவனமும் கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சும் இவ்வுபகரணங்களை வழங்கியுள்ளது. இன்று காலை கல்லடியிலுள்ள மாகாண கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மாகாண அமைச்சர் ரி.நவரட்ணராஜா உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந் நிகழ்வின் போது முன்னாள் நெக்டெப் திட்டப் பணிப்பாளர் குருஸ் அவர்களின் சேவை நலனைப் பாராட்டி கிழக்கு மாகாண முதலமைச்சரினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.
0 commentaires :
Post a Comment