3/12/2011

பேரம் பேசினாலும் சோரம் போகாது எமது கட்சி – T.M.V.P வேட்பாளர் இராசமாணிக்கம்

dsc_0145125 வருடங்களாக  தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளராக இருந்த எனக்கு அக்கட்சி  என்ன செய்தது. தமிழ் அரசுக்கட்சிக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல, மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துவதற்காகவே நாங்கள் இன்று அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். மக்கள் தற்போது சிந்திக்கத்தொடங்கி விட்டார்கள். கீரைக்கடைக்கும் எதிர்கடை ஒன்று தேவை என்பது போல் இன்றுதான் கிழக்கிலே தமிழ் அரசியல் கட்சிக்கு எதிரான ஓர் தமிழ் கட்சி உதயமாகி இருக்கின்றது.
இந்த உதயத்தினுடாகவே எமது கிழக்கு மக்களுக்கு விடிவு கிடைக்கப்போகின்றது என்பது திண்ணம். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்த பலர் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட முன் வந்திருக்கின்றார்கள். இந்த தேர்தலிலே மக்கள் வளங்குகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ் அரசு கட்சிக்கான சாவு மணி மாத்திரமின்றி, கிழக்கிற்கான அரசியல் மறுமலர்ச்சியின் ஆரம்பம் என்றால் அது மிகையாகாது என அவர் குறிப்பிட்டார்.
தமிழசுக் கட்சியின் முன்னாள் தீவிர தொண்டனும் தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாவிதன் வெளிப் பிரதேச சபையின் வேட்பாளருமான இராசமாணிக்கம் நாவிதன் வெளிப் பிரதேச சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்நது பேசுகையில், கிழக்கு மக்கள் தற்போதுதான் அரசியல் உண்மைத் தன்மைகள் பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவ்வளவு காலமும் ஓர் மாயையை நம்பி தங்களது பெறுமாதியான வாக்குகளைச் செலுத்தி வந்த மக்கள் தற்போது வாக்களிக்கும் சந்தர்ப்பத்திலே சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றார்கள். நான் ஒரு தமிழரசுக் கட்சியின் தீவிர தொண்டன் எனக்கு தனிப்பட்ட முறையிலும் எதுவும் செய்யவில்லை எமது மக்களுக்கும் எதுவும் செய்ய வில்லை அக் கட்சி. அப்படியானால் நான் அக்கட்சியின் ஆதரவாளனாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதனை நன்கு உணர்ந்துதான் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியின்ஆயுட் கால உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளேன். தற்போது வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கின்றேன்.
dsc_0153நான் இக்கட்சியில் இணைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒருசில காரணங்களைக் கூறியே ஆக வேண்டும். அதாவது கிழக்கிற்கென்று உருவாக்கப்பட்ட தனிப் பெருங்கட்சியின் தலைவர் கடந்த காலத்திலே சமூகத்தின் விடுதலைக்காக போராடி பின்னர் காலத்தின் தேவை கருதி அரசியல் கட்சியை தோற்றுவித்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றார். அவர் மக்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர் என்கின்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுமாத்திரமன்றி தற்போது மக்களுக்கான அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய கட்சி என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேதான். அதன் நோக்கம்; சிந்தனை, எதிர்காலத்திட்டம் என்பனவும் எனக்கு மிகவும் பிடித்திருக்கு அது மாத்திரமல்லாது பேரம் பேசுகின்ற ஓர் கட்சியாகவும் தற்போது மிளர்கின்றது. அவ்வாறான பல நல்ல இயல்புகளை கொணடிருக்கின்ற கட்சியில் இணைந்து மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்ததையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன்எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
dsc_0151
dsc_0139

0 commentaires :

Post a Comment