இவ்வளவு காலமும் தமிழ் கட்சி என்றால் வடக்கினை முழுமையாகக் கொண்டமைந்த தமிழ் தேசி கூட்டமைப்பு மாத்திரம் தான் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்தார்கள். ஆனால் தற்போது கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கிற்கான தனியான ஓர் அரசியல் அலகு ஏற்படுத்தப்பட்டு அதற்கான வழிவகைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய ஆட்சியில் உள்ள கிழக்கு மாகாண சபையாகும். இவ்வளவு காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற மாயைக் கட்சிக்கு வாக்களித்து எதுவித பலனும் கிடைக்காத பட்சத்தில், மக்கள் தற்போது தெளிவாக மாற்றுச் சிநதனையாளர்களாக மாறியிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திற்கான தனியான அரசியல் எற்படுத்தப்பட்டபோது ஏன் நாம் இன்னும் வடக்கின் தலைமைகளின் கீழ் செயற்படுகின்ற அத்தோடு இவ்வளவு காலமும் எதுவுமே எமது மக்களுக்குச் செய்யாத கட்சியினை ஆதரிக்க வேண்டும் என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே தங்களது முழமமையான ஆதரவினை கிழக்கில் உதயமான தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சிக்கே வழங்குவதென பலரும் முன்வந்த வண்ணம் இருக்கின்றார்கள். கல்விமான்கள் புத்திஜீவிகள், சமூகப் பற்றாளர்கள் தனவந்தர்கள் பல்கலைக் கழக சமூகம் மற்றும் இளைஞர் குழாம் அதமாத்திரமன்றி பொது அமைப்புக்கள் ஆலய பரிபாலன சபையினர்கள் எனப் பலரும் இம் முறை த.ம.வி.புலிகள் கட்சியினை ஆதரி;ப்பதாக உறுதி பூண்டுள்ளார்கள். எது எவ்வாறாயினும் 18ந் திகதி ஆட்சி அமைப்பது யார் என்பதனை மக்கள் கட்டாயம் தெளிவுபடுத்ததான் போகின்றார்கள்.அதனைப் பாhத்து பலர் ஏக்கம் கொள்ளத்தான் போகின்றார்கள். நிச்சயம் வெற்றி நமதே. பொறுத்திருந்து பார்ப்போம்.

0 commentaires :
Post a Comment