லிபியாவின் செய்திகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதில் முதன்மை நிறுவனமாக இருந்து வரும் அல்ஜெkரா தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். கடாபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வரும் லிபியாவில் ஒரு பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்த சம்பவத்தினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்று இந்த டி.வி. நிறுவன இயக்குனர் ஜெனரலர் வாடா கான்பார் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடாபிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளளனர்.
கடாபி நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார் என்ற செய்தி மட்டும் பரவி வருகிறதேயொழிய அவர் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவும், காப்பாற்றவும் தொடர்ந்து உழைப்பேன் என்றார்.
மக்கள் என்மீது பாசமுள்ளவர்கள், அவர்களை போதைக்கு அடிமைப்படுத்தி தமக்கு எதிராக திசை மாற்றப்பட்டுள்ளனர் என்றார் கடாபி. இதற்கிடையில் இங்கு நடக்கும் போராட்டம் கடாபியின் படைப் பல தாக்குதல்களை முழு அளவில் திரட்டி வருகிறது.
அல்ஜெசீரா டி.வி. நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அல்ஜசீரா அராபிக் செனலையும் இப்பகுதி மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். இந்த நிறுவன லிபியாவின் காமிராமேன் அலிஹசன் அவ்ஜொபர் செய்திகளை வழங்கி விட்டு திரும்பும்போது சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தை செய்தியாக வழங்கி விட்டு லிபியாவின் கிழக்கு பகுதியான பெங்காலிக்கு காரில் திரும்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டனர். இதில் 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலைக்கு அல்ஜெசீரா நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற மிரட்டலுக்கு அஞ்சாமல் எங்கள் பணி தொடர்ந்து நடக்கும் என்றும் குற்றவாளிகள் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கொலையில் கடாபியின் தலையீடு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களிடமிருந்து முக்கிய நகரங்கள் மீட்பு
லிபியாவில் முஅம்மர் கடாபிக்கு எதிராக சண்டையிட்டுவரும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து இராணுவம் முக்கிய நகரங்களை மீட்டு வருகிறது.லிபியாவில் முஅம்மர் கடாபிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக கிளர்ச்சி நடந்து வருகிறது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் ஸாவியா, பெங்காசி, பிரேகா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த ஸாவியா நகரை கடந்த புதன்கிழமை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். இதனால் தலைநகர் திரிபோலி நோக்கிச் செல்லும் கிளர்ச்சியாளர்களின் திட்டம் தகர்ந்தது. மற்றொரு முக்கிய நகரான பிரேகாவும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 commentaires :
Post a Comment