3/17/2011

நீங்கள் யாரை தமிழ் தேசியதலைமைத்துவம் எனக் கருதி உங்களது ஆணையினை வழங்கினீர்களோ அந்த தலைமைகள் உங்களுக்காக உங்கள் சமூகத்திற்காக என்ன செய்தார்கள்,


பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த எமது சமூகம் சகல வகையிலும் நலிவடைந்து பின்நோக்கியே ஒதுங்கிக் கொண்டிருக்கின்றது. அதிலும் கிழக்கு வாழ் மக்களுக்கு இது மிகவும் சாலப் பொருத்தமானதொன்றாகும். நலிவடைந்த எமது சமூகத்திற்கு வலுச்சேர்க்க வேண்டுமானால் அரசியல் முகவரி கொடுத்தே தீரவேண்டும் அதுமாத்திரமன்றி மிகவும் விசேட தேவையாக எமது சமூகத்திற்கு கல்வி இருக்கின்றது. ஒரு சமூகத்தின் இருப்பிற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த தேவைப்பாடுகளுக்கும் கல்வி மிக முக்கியமானதாக திகழ்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.தி/ இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியின் 2011ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர்       நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து வெளிப்படுகையில், எமது சமூகம் தொடர்ந்து பின்நோக்கிச் செல்ல நாம் ஒரு போதும் இடமளிக்கக்கூடாது கடந்த காலங்களிலே அவ்வாறு இடம் பெற்றதற்கு பல காரணங்களை நாம் குறிப்பிடலாம். ஆகையால் தற்போது அவ்வாறு எதுவும் இல்லை தற்போதைய சுமூகமான இச் சூழ் நிலையில் எமது சமூகத்தையும் அதன் இருப்புக்களையும் கட்டியெழுப்ப வேண்டிய ஆயத்தங்களை தொடங்கவேண்டும். இதற்கு அரசியல் பலம் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் கடந்த காலங்களில் எதற்குமே பொருத்தமில்லாத மக்கள் உணர்ச்சிவசப்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து எமது சமூகத்தை குட்டிச் சுவராக்கிய அரசியல் கலாச்சாரத்தை நாம் ஒதுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான ஓர் அரசியில் கட்சி உதயமாகி இருக்கின்றது. தற்போது மட்டக்களப்பினை மையப்படுத்தியதாக எமது கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்தாலும்   நடைபெற்ற உள்@ராட்சி மன்றத் தேர்தலுடன் கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் எமது கட்சியின் செய்றபாடுகள் வியாபித்துவிடும். எனவே கிழக்கில் 
இருக்கின்ற ஒவ்வொரு தமிழ் குடிமகனும் எமது சமூகத்தின் எதிர்கால முன்னெடுப்புக்கள்  மற்றும் அரசியில் நகர்வுகள்   குறித்து சிந்தித்து எமது கட்சியில் சங்கமாக வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
நீங்கள் யாரை தலைமைத்துவம் எனக் கருதி உங்களது ஆணையினை வழங்கினீர்களோ அந்த தலைமைகள் உங்களுக்காக உங்கள் சமூகத்திற்காக என்ன செய்தார்கள், தற்போது என்ன செய்கின்றார்கள் சற்று சிந்தியுங்கள். நாங்கள் நடைமுறைச் சாத்தியமான அரசியல் செயற்பாடுகளைத்தான் மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்கின்றோம். மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரைப்போல் அடைய முடியாத இலட்சியங்களை அடைந்தே தீருவோம் மற்றும் மக்களால் புரிந்து கொள்ள முடியாத சொற் பிரயோகங்களை முன்வைத்து ஒரு மாயையைத் தோற்றுவித்து அரசியல் பிரச்சாரம் செய்யவில்லை. உங்களுக்கு எங்களது கட்சியின் நிலப்பாடு எமது திட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்கின்றோம் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் இல்லையெனில் சிந்தியுங்கள் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

0 commentaires :

Post a Comment