3/18/2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிக்கை விடுத்திருந்த தமிழர் மகா சங்கத் தலைவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் _

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம் மீது இன்று முற்பகல் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிக்கை விடுத்திருந்த இவர் தனது வாகனத்தில் அலிகம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட அவர் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment