3/20/2011

மாவடிச்சேனை விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது

மிகவும் புராதான தொன்மைவாய்ந்த வெருகல் பிரதேசத்தின் மாவடிச் சேனை பிரதான வீதி ஆலயம் யுத்த சூழலில் மக்கள் இடம் பெயர்வின் போது உடைக்கப்பட்டது. பின்பு மீண்டும் மக்கள் குடியேற்றப்பட்டபோது ஆலயத்தினைப் புணருத்தாரனம் செய்ய முன் வந்தபோதும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி படையினர் அனுமதி மறுத்ததாகவும் தங்கள் ஊரின் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் ஆலயத்தினை அமைத்துத் தரும்படியும் இப் பிதேச மக்கள் பல அரசியல் தலைமைகளிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர். இருந்தும் ஆலயம் ஆரம்பிப்பதில் தொடந்தும் தடைகள் காணப்படுவதாக மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடம் குறிப்பிட்டதனை அடுத்து அவாகளின் பிரத்தியேக நிதிமூலம் 1ம் கட்ட வேலை ஆரம்பிப்பதற்கான பொருட்கள் வழங்கிவைக்கப் பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு பாதுகாப்புப் படையினர் அலுவலகத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், ஆலய பரிபாலன சபையினர், கிராம சேவகர், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அசாத் மௌலானா, ரமேஷ், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

0 commentaires :

Post a Comment