3/22/2011

வேலையற்ற இளைஞர்களுக்கான சாரதி, மின்னிணைப்பு பயிற்சிநெறி

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்படி பயிற்சி நெறி இடம்பெற்று வருகின்றது. அதனொருஅங்கமாக இன்று(21.03.2011) வாழைச்சேனை மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தொழில்வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர்களில் சாரதி மற்றும் மின்னிணைப்பு பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலாதன் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி பயிற்சி நெறிகளுக்கு சேவா லங்கா நிறுவனமும் காந்தி சேவா அமைப்பும் அனுசரணை வழங்கியிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் பயிற்சிநெறியினை நிறைவு செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார், வாழச்சேனை பிரதேசசெயலாளர் கிரிதரன் மற்றும் சேவா லங்கா அமைப்பின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

0 commentaires :

Post a Comment