3/07/2011

அமெரிக்க சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை


விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு இராணுவ ரகசியங்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்டவரை, வாரத்துக்கு, குறைந்தது ஒரு நாளாவது ஆடைகள் இல்லாமல் தூங்கும்படி அமெரிக்க சிறை அதிகாரிகள் தண்டனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டின் இறுதியில் விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் மூலம், அமெரிக்க இராணுவத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், ஈராக் மற்றும் ஆப்கனில் அமெரிக்க இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அமெரிக்க இராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு கொடுத்ததாக, அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மேனிங் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். ஏழு மாதங்கள் வரை இவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விர்ஜினியா வில் உள்ள கடற்படை சிறை வளாகத்தில் தற்போது இவர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிராட்லி மேனிங்கிற்கு சிறை அதிகாரிகள் விசித்திரமான தண்டனையை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாரத்துக்கு குறைந்தது ஒரு நாளாவது ஆடைகள் இல்லாமல் தூங்க வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.

0 commentaires :

Post a Comment