ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் காணப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் உட்பட முக்கிய பதவிகளுக்குப் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் செயற்குழுக் கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, நேற்று செயற்குழு மீண்டும் கூடியது.
நேற்றைய செயற்குழுக் கூட்டத்திலும் தொடர்ந்து இழுபறி நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஆராய்வதற்கு இன்று மாலையும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மீண்டும் கூடவுள்ளது.
0 commentaires :
Post a Comment