மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் இலங்கை மின்சார சபையால் வீதி மின்விளக்குகளை பொருத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்ததுடன் கடந்தவருடம் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திருகோணமலையில் நடத்தபட்ட கிழக்குமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பூ.பிரசாந்தன் இக்கோரிக்யை முன்வைத்திருந்தார் இதற்குப் பதிலளித்த மின்சாரசபை அதிகாரிகள் இலங்கை மின்சாரசபையின் வருமானமீட்டும் நிலை மிகக் குறைவாகச் செல்வதாகவும் புதிய மின் விளக்குகளை பொருத்தும் நடைமுறை தற்சமயம் இல்லையெனவும் குறித்த பகுதி வீதி மின்விளக்குகளுக்கான ஒதுக்கீடுகள் கிடைத்தால் மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் கிழக்குமாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தனது மாதச் சம்பளத்தில் பூரணமாக மட்டக்களப்பு புதிப்பிக்கப்பட்ட வீதிக்கு மின்விளக்குகளை பொருத்தியதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் தேவையையுணர்ந்து காலத்திற்கு ஏற்ற இது போன்ற சேவைகள் செய்வதற்கு எல்லா மக்கள் தலைவர்களும் முன்வருவது சாலச்சிறந்த மாற்றமாக அமையும் என மக்கள் தெரிவிக்கின்றனர்
0 commentaires :
Post a Comment