3/06/2011

வாகரை பிரதேச மீன்பிடி சங்கங்களுடன் விசேட கலந்துரையாடல்


dsc_0017
வாகரைப் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட மீனவர் சங்கங்களுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்திணைக்கள உதவிப்பணிப்பாளர் S ஜோர்ச் தலமையில் பேத்தாழை மாரியம்மன்கோவில் முன்றலில் இடம்பெற்றது. வாகரைப்பிரதேசத்தின் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பாக இக் கூட்டத்தில் விசேடமாக ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்குமாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம், மற்றும் மீன்பிடித்திணைக்கள அதிகாரிகள் மீன்பிடிச்சங்க உறுப்பினர்கள் படகு உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள்.
இக்கலந்துரையாடலில் கருத்துதெரிவித்த கிழக்குமாகாண முதலமைச்சர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பிரதானமான தொழிலிலே மீன்பிடி மிகமுக்கியத்துவம் பெறுகிறது. அதனடிப்படையில் வாகரைப்பிரதேசமானது நண்ணீர் மற்றும் உவர்நீர் மீன்பிடித்தொழிலை மேற்கொள்வதற்கான சிறந்த ஓர் பிரதேசமாகும். இப்பிரதேசமானது கடந்தகால யுத்தம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட பிறகும் பின்தங்கிய பிரதேசமாகும். இப் பிரதேசம் தொடர்ந்து பின்தங்கிய ஓர் பிரதேசமாக இருக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் கரிசனையோடு செயல்படுகிறேன். ஆதற்கு அரசியல் வாதியான நான் மாத்திரம் நினைத்தால் போதாது. கிழக்கு பிரதேச மக்கள் ஒவ்வொருவரும் தற்களது பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து
 சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசுகையில் வாகரை பிரதேசத்தில் மீன் பிடி அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு திடடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபையின் தோற்றத்தின் பின்னரே வாகரைப்பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதென்றால் அது மிகையாகாது. எனவே சகல வளங்களும் நிறைந்திருக்கின்ற எமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். மீன்பிடி தொழிலை சீராக மேற்கொண்டு வாகரை பிரதேசத்தின் அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் அமைப்பதோடு இப்பிரதேசத்தினது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கும் அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment