தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் காரியாலயம் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அவர்களினால் இன்று காலை 10.30மணிக்கு வாழைத்தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக் கரியாலயத்தினூடாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சாரப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் தற்போது கிழக்குப் பிரிந்து கிழக்கிற்கிற்கான தனியான ஓர் அரசியல் யுகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான அடித்தளத்தினை இட்ட கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. கிழக்கிற்கான தனித்துவமானதும் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை கொண்டமைந்ததுமான எமது கட்சிதான் இன்று கிழக்கு மாகாண சபையின் முக்கிய வகிபங்கினைக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் பிரதேச சபைகள் அனைத்தினையும் தனது ஆளுகைக்கு உட்படுத்தி இருக்கிறது. இதனை ஒரு சில குறிப்பிட்ட பழம் பெரும் கட்சி என தங்களைக் கூறிக் கொள்வோரினால் சகித்துக் கொள்ள முடியாது இருக்கிறது. இதனால் வேண்டத்தகாத பொய்ப் பிரச்சராங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அதுமாத்திரமன்றி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது எதனைச் சாதித்திருக்கிறது என்றெல்லாம் விதண்டாவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்கின்றேன் முடியுமானால் இவ்வளவு காலமும் மக்களினது வாக்குகளை பெற்ற அவர்களால் எம் மக்களுக்காக என்ன செய்திருக்கின்றார்கள்?; என்பதனை தெளிவாக ஓர் அறிக்கையில் தெரியப்படுத்தட்டும். இவ்வளவு காலமும் பசப்பு வாhத்தைகளை மக்களுக்கு கூறி வாக்குகளைப் பெற்று அம் மக்களை நடுக்கடலில் விட்டு விட்டு தற்போது தேர்தல் காலங்களில் மாத்திரம் தலைகாட்டும் இவர்கள் எமது மக்களுக்காக கடந்த காலங்களில் என்ன செய்திருக்கிறார்கள்.
எமது மக்களுக்கு இன்று இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு அடித்தளமிட்டவர்கள் யார்? மக்களுக்கு நன்றாககத் தெரியும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் தொடங்கி முள்ளி வாய்க்கால்வரை மக்களை கொலைக் களத்திற்கு அனுப்பியதுதான் மிச்சம். அதனால் எற்;பட்ட விளைவுகளுக்கு இவர்களே பொறுப்புக் கூற வேண்டும் . அப்போது இளைஞர்களை சூடாக்கி கொலைக் களம் அனுப்பிவிட்டு அதனாலே அரசியல் பலம் பெற்றவாக்கள் அம்மக்களுக்காக இன்று வரை என்ன செய்திருக்கின்றார்கள். மக்களே சிந்தியுங்கள். இவ்வளவு காலமும் ஆட்சியிலிருந்து வாக்களித்த மக்களுக்காக எதனையுமே செய்யாத பழுத்த அரசியல்வாதிகளை ஓரங் கட்டிவிட்டு, இளைஞர்கள் கொண்ட எமது கட்சிக்கு ஓர் சந்தர்ப்பத்தினை வழங்கிப்பாருங்கள் இப் பிரதேசத்தினை எவ்வாறு அபிவிருத்தி செய்து எவ்வாறான மாற்றித்தினை ஏற்படுத்தி காட்டும் என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :
Post a Comment