லிபியாவில் அரசு எதிர்ப்புப் படையினர் தலைநகர் திரிபோலியை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர். இதனால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய எதிர்ப்பு புரட்சிப் படையினர், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டனர். தொடர்ந்து தலைநகர் திரிபோலியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். திரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு, எதிர்ப்பு படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என அச்சம் நிலவுகிறது.
பெங்காசி, அல்பைடா, டெர்ணா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளை கடாபி எதிர்ப்பாளர்கள் இராணுவத்தின் துணையுடன் கைப்பற்றினர். பெங்காசியில் முன்னாள் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா முகமது அப்த் அல் ஜலீல் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவில் கடாபி இராணுவம் மற்றும் எதிர்ப்பு படைகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது. இறுதியில் ஜாவியா நகர் எதிர்ப்பாளர்கள் கையில் வந்தது. ஜாவியா நகரை சுற்றியுள்ள ரிபாத், கபா, ஜடோ, ரோக்பன், ஜென்டன் போன்ற பல்வேறு சிறு நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
எனினும் நகரின் வெளிப்பகுதியில் 2000 இராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களை தாக்க தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும்பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். திரிபோலிக்கு வெளியே 28 கிலோ மீற்றர் தூரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளனர்.
அந்நகரில் உள்ள அரச வானொலி கட்டடம் மீது குண்டு வீதி தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர் துப்பாக்கி சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்த வர்களை எதிர்ப்பாளர்கள் சிறைப்பிடித்தனர்.
இதனிடையே திரிபோலியின் புறநகர் பகுதியான உஜோரோவில் கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரிபோலியின் சில பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 600 பேர் இருந்து 2000 அளவிலானோர் திரிபோலியில் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ. நாவுக்கான மனிதாபிமான செயற்பாடுகளுக் கான தலைவர் வலாரி அமோஸ் தெரி வித்துள்ளார்.
இதேவேளை, லிபியாவில் நிலவிவரும் பதற்றமான சூழல் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று லிபிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவிதிப்பது குறித்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.
லிபியாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக நேற்றைய தினம்வரை பல்லாயிரக்கணக்கானோர் அண்டிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். சுமார் 61,000 பேர் எகிப்துக்கும், 1000 பேர் நைஜீரியாவுக்கும், 40,000 பேர் துனீசியாவுக்கும் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி நாட்டை ஆள்வதற்கான சட்டபூர்வமான உரிமை அனைத்தையும் இழந்துவிட்டதால் தனது தேசத்துக்கான நம்பகமான தலைவராக அவர் நீண்டகாலம் இருக்க முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
லிபிய மக்களின் பார்வையிலும், உலக நாடுகளின் பார்வையிலும் நாட்டை ஆள்வதற்கான அனைத்து சட்டபூர்வ உரிமைகளையும் கடாபி இழந்துவிட்டார். எனவே அவரது தேசத்துக்கான நம்பகமான தலைமையாக அவர் நீண்டகாலம் இருக்க முடியாது என வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ஜே. கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லிபிய அரசில் இப்போது நீங்கள் உறுப்பினராக இருந்தால், யார் பக்கம் இருக்க வேண்டும் என்பது குறித்து மிகவும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கடாபி பக்கம் இருந்தால், இந்த ஆட்சியின் பக்கம் இருந்தால், உங்களது மக்களை கொல்லும் உத்தரவை நீங்கள் ஏற்றால் நீங்களும் அதற்கு பொறுப்பாக்கப்படுவீர்கள் என அவர் கூறினார்.
லிபிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும், மக்களுக்கு எதிரான அநீதியையும் முடிவுக்குக்கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாடு கடத்துவது ஒரு விரைவான நடவடிக்கை யாக இருந்து அது நடந்தால், அதை ஆதரிப் போம். ஆனால் பொறுப்பற்ற செயல் களுக்காக கடாபியும் மற்றவர்களும் பொறுப் பாக்கப்படுவார்கள் என கார்னி கூறினார்

நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லைகடாபி பேட்டி “நாட்டை விட்டு ஒரு போதும் வெளியேறப் போவ தில்லை” என்று லிபிய ஜனாதிபதி கடாபி தெரி வித்துள்ளார். பி.பி.சி. தொலைக்காட் சிக்கு பேட்டி அளித்துள்ள அவர், லிபிய மக்கள் நேசிப்ப தால்தான் தாம் தொடர்ந்து ஜனாதிபதியாக நீடிப்பதாக கூறியுள்ளார். லிபியாவை அபகரிக்க நினைப்பவர் களிடம் இருந்து தம்மை காக்க ஆதர வாளர்கள் உயிர்த்தியாகம் செய்து வருவ தாகவும் அவர் தெரிவித் துள்ளார். அல் கொய்தா தீவிர வாதிகள் போதைப் பொருட்களை வினியோ கித்து போராட் டங்களை தூண்டி வருவதாகவும் கடாபி கூறியுள்ளார். நாட்டை விட்டு ஒரு போதும் வெளி யேறப்போவதில்லை என்று கூறியுள்ள கடாபி, தாம் நாட்டை விட்டு ஓடிவிட் டார் என்று வதந்தி பரப்புவர்கள் நம் பிக்கை துரோகிகள் என்று விமர் சித்துள்ளார். |
எனினும் நகரின் வெளிப்பகுதியில் 2000 இராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களை தாக்க தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும்பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். திரிபோலிக்கு வெளியே 28 கிலோ மீற்றர் தூரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளனர்.
அந்நகரில் உள்ள அரச வானொலி கட்டடம் மீது குண்டு வீதி தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர் துப்பாக்கி சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்த வர்களை எதிர்ப்பாளர்கள் சிறைப்பிடித்தனர்.
இதனிடையே திரிபோலியின் புறநகர் பகுதியான உஜோரோவில் கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரிபோலியின் சில பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 600 பேர் இருந்து 2000 அளவிலானோர் திரிபோலியில் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ. நாவுக்கான மனிதாபிமான செயற்பாடுகளுக் கான தலைவர் வலாரி அமோஸ் தெரி வித்துள்ளார்.
இதேவேளை, லிபியாவில் நிலவிவரும் பதற்றமான சூழல் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று லிபிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவிதிப்பது குறித்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.
லிபியாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக நேற்றைய தினம்வரை பல்லாயிரக்கணக்கானோர் அண்டிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். சுமார் 61,000 பேர் எகிப்துக்கும், 1000 பேர் நைஜீரியாவுக்கும், 40,000 பேர் துனீசியாவுக்கும் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டுள்ளது.
லிபியாவை விட்டு வெளியேறுங்கள்கடாபிக்கு ஹிலாரி அறிவுரை லிபிய நாட்டு ஜனாதிபதி முஅம்மர் கடாபி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளி யுறவுத் துறை செயலாளர் ஹிலாரி கிளின்டன் கேட்டுக்கொண்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு பயண மானார். அதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறுகை யில், கடாபி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூலிப்படைகள் போராட்டக்காரர்களை கொடுமைப் படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். |
இதற்கிடையே, லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி நாட்டை ஆள்வதற்கான சட்டபூர்வமான உரிமை அனைத்தையும் இழந்துவிட்டதால் தனது தேசத்துக்கான நம்பகமான தலைவராக அவர் நீண்டகாலம் இருக்க முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
லிபிய மக்களின் பார்வையிலும், உலக நாடுகளின் பார்வையிலும் நாட்டை ஆள்வதற்கான அனைத்து சட்டபூர்வ உரிமைகளையும் கடாபி இழந்துவிட்டார். எனவே அவரது தேசத்துக்கான நம்பகமான தலைமையாக அவர் நீண்டகாலம் இருக்க முடியாது என வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ஜே. கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லிபிய அரசில் இப்போது நீங்கள் உறுப்பினராக இருந்தால், யார் பக்கம் இருக்க வேண்டும் என்பது குறித்து மிகவும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கடாபி பக்கம் இருந்தால், இந்த ஆட்சியின் பக்கம் இருந்தால், உங்களது மக்களை கொல்லும் உத்தரவை நீங்கள் ஏற்றால் நீங்களும் அதற்கு பொறுப்பாக்கப்படுவீர்கள் என அவர் கூறினார்.
லிபிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும், மக்களுக்கு எதிரான அநீதியையும் முடிவுக்குக்கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாடு கடத்துவது ஒரு விரைவான நடவடிக்கை யாக இருந்து அது நடந்தால், அதை ஆதரிப் போம். ஆனால் பொறுப்பற்ற செயல் களுக்காக கடாபியும் மற்றவர்களும் பொறுப் பாக்கப்படுவார்கள் என கார்னி கூறினார்
0 commentaires :
Post a Comment