திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி, என்,புள்ளநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில், புதிதாக உருவாக்கப்பட்ட திருக்கோவில் கல்வி வலயம் தற்போது கூடிய வளர்ச்சியினை கண்டு கொண்டிருக்கின்றது.
அதன் ஓர் அங்கமாகவேதான் இவ் விளையாட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மாணவர்கள் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டு போன்ற ஏனைய புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் திறமையினைக்காட்டி தேசிய ரீதியில் போட்டியிடும் அளவிற்கு நாம் முன்னேற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இவ் விளையாட்டு விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுணர் ரியர் அட்மிரல் மொகான் விஜே விக்ரம, மாகாண விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா, பூ.பிரசாந்தன், எஸ்.செல்வராசா மற்றும் வலயக்கல்வி அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment