இ
லங்கையின் உண்மையான உரிமைக்காரர்களான வேடுவ இனத்தைச் சேர்ந்த சுமார் 400 ஆதிக்குடிகளுக்கு சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட ஒரு வேதனைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்களிடம் தங்கள் அடையாளத்தை ஊர்ஜிதம் செய்வதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லை என்ற காரணத்தை முன்வைத்தே தேர்தல் அதிகாரிகள் இந்த மக்களின் பிறப்புரிமையான வாக்குரிமையை பறித்திருக்கிறார்கள்.
ரத்துகல பிரதேசத்திலும், அதனைச் சார்ந்த 5 கிராமங்களிலும் வாழ்ந்து வந்த வேடுவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கே இந்த அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ரத்துகல முல்லேகம, நெல்லியத்த, கல்கமுவ, ரத்மல்காலல்ல ஆகிய மாதுல்ல பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே இந்த கஷ்டத்தை எதிர்நோக்கி வேண்டியிருந்தது.
இது பற்றி விளக்கம் அளித்த வேடுவ இனத்தின் தலைவர் வன்னி அத்தோ 2009ம் ஆண்டு தேர்தலில் வாக்களிப்பதற்காக பிரதேச செயலகம் தங்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கிய போதிலும், அவ்வாண்டில் தேர்தல்கள் முடிவடைந்தவுடன் அந்த அட்டைகள் மீண்டும் வாபஸ்பெறப்பட்டதாக கூறினார்.
தாங்கள் எத்தனையோ தடவைகள் தங்கள் பிரதேச கிராம சேவக உத்தியோகஸ்தரிடம் இந்த அடையாள அட்டைகளை தங்களுக்கு திரும்ப பெற்றுக் கொடுக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் இதுவரை நிறைவேற்ற ப்படவில்லை என்று அவர் மேலும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 commentaires :
Post a Comment