3/19/2011

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் த.ம.வி.புலிகள் கட்சிக்கு வெற்றி

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3பிரதிநிதித்துங்களைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச சபையில் ஒரு பிரதிநிதியும் அம்பாரை மாவட்டத்தில் நாவிதன்வெளி மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச சபைகளுக்கு தலா ஒருவருமாக மொத்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்ட அனைத்துச் சபைகளிலும் ஒவ்வொரு பிரதிநிகளைப் பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி பிரதேச சபை) க்கான தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பை விட அதிகப் படியான வாக்கு களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் த.ம.வி.புலிகள் கட்சி பெற்றி பெற்று விட்டது என்றே கூறவேண்டும். அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேச சபைகள் முற்றுமுழுதான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டைகள்அவ்வாறான கோட்டைகளுகு;குள் நுழைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3பிரதிநிதிகளைப் பெற்றது பாராட்டுதற்குரியதாகும். தமிழ் மக்கள் மத்தியிலே மூன்று வருடங்களில் அக் கட்சி சேவையாற்றியபோதும் தமிழ் தேசிய கூட்டைப்பின் கோட்டை எனக் கூறப்படுகின்ற பிரதேசங்களிலே தனது உறுப்பினர்களைப் பெற்றிருப்பது. மக்கள் த.ம.வி.புலிகள் கடட்சிக்கு கொடுத்துவருகின்ற ஆதரவின் ஆரம்பமாகும்.துமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்டியிட்ட பிரடீதேச சபைகளில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்:
பிரதேச சபை பெற்ற வாக்குகள் ஆசனம்
நாவிதன்வெளி                1769                                          01
ஆலையடிவேம்பு 859     859                                                   01
வெருகல் 527                    527                                             01
ஓட்டமாவடி491                   491                                         00

0 commentaires :

Post a Comment