38ஆவது இலக்கியச் சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் பெப்ரவரி 19,20 ந்திகதிகளில் நடைபெற்றது. 70 இற்கு மேற்பட்டோர் பங்கு கொணடனர்.
இந்நிகழ்வில் தீண்டாமைக் கொடுமைகள் ,பெண்ஓடுக்குமுறை இனரீதியான முரண்பாடுகள், உறவுகள் ,தன்னினச்சேர்க்கையாளர்கள,; திருநங்கையர் எதிர்நோக்கும் சவால்கள் சூழலியல் சிதைவுகள் வடஆபிரிக்க அரபுக் கிளர்ச்சிகள் பேசப்பட்டன.
கட்டுரை,புத்தகம், கவிதை, ஆற்றுகை, ஓவியம் என பலவடிவங்களில் நிகழ்ந்தன.
எதற்கும் சர்வரோக நிவாரணிகள் இருப்பதாக பேசப்படவில்லை.
எதற்கும் சர்வரோக நிவாரணிகள் இருப்பதாக பேசப்படவில்லை.
உணர்வுகளில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்;சியாக இருந்தது. வரண்ட விரக்தியான வன்முறை சூழ் வெளியில் செயற்படும் எனக்கு சற்று மன ஆறுதல். நாம் தனிமையில் இல்லை என்ற உணர்வு.
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் சமூகப்பிரக்ஞை உள்ளவர்களின் சங்கமம் அது.
சகலவிதமான எமது சமூக பத்தாம்பசலித் தனங்களுக்கெதிராக கேள்வி எழுப்பப் பட்டது. வௌ;வேறுபட்ட கருத்துக்களினூடாக மனிதாபிமானம் அங்கு பிரவாகித்தது.
சகலவிதமான சமூகத்தழைகளிலிருந்தும் விடுபடவேண்டும், இங்கு புனித ஏற்பாடென்று எதுவுமில்லை என்ற மானசீகமான உணர்வு அவரவர் கண்ணோட்டதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது.
வன்முறையற்ற சமூகம் வலியுறுத்தப்பட்டது. வுன்முறைமயப்பட்ட கடந்தகாலமும் நிகழ்காலமும் அகலவேண்டும் என்ற அங்கலாய்ப்பு காணப்பட்டது.

யுத்தம் , வன்முறை ,இயற்கை அனர்த்தங்களால் அனுபவித்ததுன்பங்கள் பலராலும் எடுத்துரைக்கப்பட்டது.
சமூகங்களிடையே புரிதலை ஏற்படுத்துதல் ,கலை, இலக்கியம் சினிமாவினூடான முயற்சிகள் அனுபவங்கள் பரிமாறப்பட்டன.
சமூகங்களிடையே புரிதலை ஏற்படுத்துதல் ,கலை, இலக்கியம் சினிமாவினூடான முயற்சிகள் அனுபவங்கள் பரிமாறப்பட்டன.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்திய கிளாச்;சிகள் நடைபெற்ற நாட்டின் தலைநகரில் இன்நிகழ்வு நடைபெற்றது சிறப்பு.
மெலிதான சூடான விவாதங்களுக்கிடையே சகோதரத்துவம் நிலவியது.
நாட்டு நிலைமை புலம்பெயர்தளத்தின் கலவைச் சாயல் அனுபவங்களுடன் பரிமாறப்பட்டன. ஐரோப்பா ,வடஅமெரிக்கா, இலங்கை, இந்தியாவிலிருந்து இந்த சங்கமம் நிகழ்ந்தது.
சமூகத்தின் தார்மீகஉணர்வை வலுப்படுத்துபவை இத்கைய நிகழ்ச்சிகளே.
“ஏட்டுத்திக்கும்செல்வோம் கலைச்செல்வங்கள் யாவும் கொணாந்திக்கு சேர்ப்போம” என்ற பாரதியன் வார்த்தைகள் இங்கு யதார்த்தமாகவேண்டும.; எமது உலகளாவிய பலத்தினை சாதகமாக பிரயோகித்தால் அது சமூகத்தின் விமோசனத்திற்கு பாரிய பங்களிப்பாகும் .
இந்த சந்திப்புக்கள் இன்னும் ஆழமும், முதிர்ச்சியும், ஈடுபாடும் நிறைந்ததாக ஆகவேண்டும்..
ஆக்கபூர்வமாக பேசியவற்றை செயற்படுத்துவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
போருக்குப் பிந்திய புலம்பெயர்தள இடைவெளியில் இன்னும் விரிவாகச்செயற்பட முடியுமா என்று பார்க்கவேண்டும். -சுகு-
ஆக்கபூர்வமாக பேசியவற்றை செயற்படுத்துவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
போருக்குப் பிந்திய புலம்பெயர்தள இடைவெளியில் இன்னும் விரிவாகச்செயற்பட முடியுமா என்று பார்க்கவேண்டும். -சுகு-
0 commentaires :
Post a Comment