கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை முனைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.முனைப்பின் மாணவர் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபா செலவில் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு இவ் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆரம்பக்கல்விப்பிரிவில் கல்வி கற்கும் 5000 மாணவர்களுக்கு இவ்உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கல்குடா கல்விவலய மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செங்கலடி மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி எம். சுபைர் உட்பட பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும், மாணவர்களும் முனைப்பின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முனைப்பு நிறுவனம் ஏற்கனவே உணவுப்பொருட்கள், பால்மா, மருந்துப்பொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்குமாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ விரும்பும் அன்பர்கள் (munaippu@hotmail.com எனும் முகவரி ஊடாக முனைப்பு அமைப்பினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்
)
0 commentaires :
Post a Comment