48 சிவிலியன் பலி; 150 காயம்
லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய தளங்களின் மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இணைந்து இரண்டாவது நாளாகவும் நேற்று தாக்குதல் நடத்தின.வான் மற்றும் கடல் மார்க்கமாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் நேற்று அறிவித்தது.
இதில் அமெரிக்கா, பிரிட்டன் இராணு வம் கடல் மார்க் கமாக லிபியாவின் முக்கிய தளங்கள் மீது 110 மிசைல் களை ஏவிய தாகவும் பிரான்ஸ் விமானங்கள் மூலம் லிபிய இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் பென்டகன் மேலும் தெரிவித்தது.
பெங்காசியில் கடாபி ஆதரவுப் படையின் இராணுவ வாகன மொன்றுக்கு முதலில் தாக்குதல் நடத்திய பிரான்ஸ் விமானம் தொடர்ந்து லிபிய அரசின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் போது லிபியாவின் 20 முக்கியமான இராணுவ மற்றும் அரச தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் படைகள் கூறியுள்ளன.இதன் போது அமெரிக்கா, பிரிட்டன் ஏவுகணைகள் தலைநகர் திரிபோலி மற்றும் மிஸ்ரடாவில் அமைக்கப்பட்டுள்ள விமான எதிர்ப்பு தளங்கள் மீத தாக்குதல் நடத்தியுள்ளன.
இந் நிலையில் இந்த தாக்குதலில் 48 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் லிபிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை என பி. பி. சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டனின் தாக்குதலின் பின் முதல் முறையாக அரச தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் பேசினார். அதில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதம் ஏந்த அனுமதிப்பதாகவும், இதற்காக ஆயுதக் கிடங்குகளை திறந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று கடாபி ஆதரவாளர்கள் பாப் அல் அஸிசியாவில் ஒன்றுதிரண்டு பிரான்ஸ், அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை லிபிய அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இந்த வேளை, லிபியத் தலைவர் கடாபியின் ஆதரவு இராணுவத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் இணைந்து ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கைக்குத் தாம் தலைமை தாங்கவில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளே லிபியாவின் சர்வதேச தலையீட்டுக்குத் தலைமை வகிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஈராக்குக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்கா தலைமையிலான சர்வதேசப் படை ஆரம்பித்து எட்டு வருடங்களின் பின்னர் லிபியாவுக்கு எதிராக சர்வதேசப் படைகள் இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.
லிபிய மக்களின் பாதுகாப்புக்காகவே அந்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டி ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
லிபிய மக்களைப் பாதுகாப்பதற்கு சர்வதேச நாடுகள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவிகளை வழங்குமாறு அமெரிக்கப் படை அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஒபாமா ஊடகவியலாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.
கடாபிக்கு ஆதரவாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்டிருக்கும் சர்வதேச இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவும் பங்காளியாக உள்ளது. தான் முன்னர் கூறியதைப் போன்று மீண்டும் ஒருமுறை அமெரிக்க இராணுவப் படைகளை தரைமார்க்கமாக இறக்கப்போவதில்லை யென்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான பெங்காசி மற்றும் அதனை அண்டிய அஜமியா பகுதிகளில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment