சுவிஸ் உதயம்(கிழக்கு) அமைப்பின் அனுசரனையுடன் மாணவ மீட்புப் பேரவையினால் நடாத்தப்பட்ட மாணவ ஊhக்குவிப்பு விழா 2011 இன்று(20.03.2011)கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இடம் பெற்றது. அம்பாரை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலுலிருந்தும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற திறமையான மாணவர்கள் 103 பேருக்கு வங்கிக் கணக்கில் தலா 5000ரூபாய் வைப்பு செய்து அதற்கான வங்கிக் கணக்குப் புத்தகங்கள் அவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் கிழக்கு மாதகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வங்கிக் கண்க்கு புத்தகங்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தேசிய பொருளாளர் க. துரைநாயகம் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment