3/16/2011

தமி;ழ், சிங்கள், முஸ்லிம் மக்களிடையே புரி;ந்துணர்வை ஏற்படுத்த தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டிருக்க வேண்டும்

ஊடகவியலாளர்களுக்காக நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த ஒரு நாள் செயலமர்வு ஏதோ ஒரு காரணத்தினால் நடத்தப்படாமல் கைவிடப்பட்டு மீண்டும் நான் ஊடகத்துறை அமைச்சராக வந்ததன் பின்னர், செயலாளர் கனேகல அவர்களின் முயற்சியின் பயனாக மீண்டும் செயலுருவம்பெற ஆரம்பித்துள்ளது.
நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட செயலாளர் உட்பட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.




 

சீலரட்ணசெனரத் அவர்கள் பேசும் போதும், ஊடகவியலாளர்களுடன் பேசும் போதும் அவருக்கென தனித்துவம் இருக்கிறது. உரிமையுடன் பேசும் அதிகாரமும் அவரிடமும் உள்ளது. நான் உண்மையிலேயே மனம்வருந்துகிறேன். ஏனெனில் எனக்கும் செயளருக்கும் இல்லாத ஒரு தனித்துவம் அவரிடம் இருக்கிறது. அதுதான் மொழி ஆற்றல்.
மொழி ஆற்றல் எமக்கு மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு பிரச்சினை தான். சீலரட்ன செனரத் அவர்கள் அந்த மொழி ஆற்றலினால் இங்குள்ள தமிழ் ஊடகவியலாளர்களுடன் மிகவும் நெருக்கமாக அவர்களது மனதை தொடும் விதத்தில் அவர்களது மொழியில் உறையாற்றினார். உண்மையில் நான் மனம் வருந்துகிறேன். அந்த ஆற்றல் எமக்கில்லை என்பதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
உண்மையில் இந்த நாட்டின் மக்கள் என்ற வகையில் அதிகளவு உணர்கின்ற ஒரு முக்கிய பிரச்சினைதான் இந்த மொழிப் பிரச்சினை.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவதற்கு நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலே தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தால் எமது நாடு இதை விட பல மடங்கு நட்பு ரீதியான சமூகத்தை கொண்டதாக இருந்திருக்கும். ஊடகத்துறை மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் உலகத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்க முடியும். நாம் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோம்.
என்றாலும் நாம் இன்னும் காலம் கடந்தவிட்டவர்கள் அல்ல. தமிழ், சிங்கள மக்களிடையே அன்னியோன்ய புரிந்துணர்வை வளர்ப்பதற்கு ஊடகங்கள் ஊடாகவேணும் மொழியை கற்க உதவிகள் செய்ய வேண்டும். நாம் ஆறடி நிலத்துக்குள் போகும் வரை கற்க முடியும். மனிதன் என்பவன் வாழ்நாள் முழுவதும் கற்க முடியும். எனவே தமிழ், சிங்கள மொழியை கற்பிக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
தற்போது அரச நிர்வாக துறையில் தமிழ் மொழியை கற்கும் நடைமுறை அமுலில் இருக்கிறது.
நான் உங்கள் மத்தியில் தமிழ் மொழியில் உரையாற்றக்கூடியவனாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். நீங்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள். மொழி ஆற்றல் எனக்கு இல்லை என்பதால் உண்மையிலேயே இதய பூர்வமாக மனம் வருந்தினேன்.
இது உண்மையிலேயே பெரும் குறையாகவே காண்கிறேன். மனதார நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெரும் குறைவாக கருதுகிறேன்.
சுதந்திரத்தின் பின்னர் மாறிமாறி ஆட்சிக்குவந்தவர்களினால் கணக்கெடுக்கப்படாத அவதானம் செலுத்தப்படாத, இதனாலேயே பேரழிவுகளை ஏற்படுத்துவதற்கு பிரதான காரணமாக விருந்த, மக்களிடையே புரிந்துணர்வு, ஒற்றுமை போன்றவற்றை சீர்குலைக்க ஏதுவாக இருந்த மொழிப் பிரச்சினையை 65 வருடங்களின் பின்னராவது கண்டுபிடித்திருக்கிறோம்.
இப்போது இதனை கலைவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவரும் சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது. ஊடகங்கள் இதற்காக மிகவும் பெறுமதியான பங்களிப்புகளை செய்ய வேண்டும்.
உலகத்தில் கல்வி, அறிவு என்ற இவ்விரண்டையும் பூர்த்தி செய்ததாக எவரும் இல்லை. தினமும் நாம் கற்கிறோம். புத்தகத்தின் ஊடாக மட்டுமல்ல, தொழில் ஸ்தாபனம், சூழல் எதுவாகவும் இருக்கலாம் அனைத்திலும் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். பிறந்தநாள் முதல் இறக்கும் நாள் வரை கற்கமுடியும். கற்பதற்கு கட்டுப்பாடுகள் இல்லை.
கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்சொள்வது நாங்கள் தான். கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டால், நான் ஏன் இந்த செயலமர்வுக்கு செல்லவேண்டும் இன்று விடுமுறை நாள்.
இந்த செயலமர்வுக்குச் சென்று என் காலத்தையும் நேரத்தையும் செலவுசெய்ய வேண்டும். வீட்டில் இருந்தபடி கிரிக்கெட் மெட்ச் ஒன்றை பார்ப்போம் என நினைப்பதுடன் நான் சிரேஷ்ட ஊடகவியலாளர் எனக்கேன் இவையெல்லாம் என்று நினைப்பதுடன் எமக்கு எதனை கற்பிக்க போகிறார்கள் என்று நாங்கள் நினைப்போமானால் எமது கல்வி அறிவு அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.
பிறந்த நாள் முதல் இறக்கும் நாள்வரை நாம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் இவ்வாறான செயலமர்வுகள் எமக்கு துணை புரியும். சகல துறைகளிலும் இவ்வாறான செயலமர்வுகள் நடத்தப்படுதல் அவசியம். இவை பெறுமதி மிக்கதாக அமைகின்றன.
இவர் தமிழர், இவர் சிங்களவர், இவர் முஸ்லிம் என நான் ஒற்வொருவருக்கும் லேபள் குத்திவிட்டு பிரித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழர் என்றோ, முஸ்லிம் என்றோ, சிங்களவர் என்றோ நோக்கப்படுவது அவரவரது தனிப்பட்ட விடயம். நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டிய ஒரு விடயத்தை சமுதாயத்தின் மத்தியில் கொண்டு வந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி பிரச்சினையாக்கி விட்டிருக்கிறோம்.
இவற்றை கலைவதற்கு இவ்வாறான செயலமர்வுகளில் கலந்துகொண்டு சகலருடனும் கருத்துப் பரிமாற்றங்களை செய்வதுடன் சமூகத்துக்கு நற்செய்திகளை ஊடகங்கள் ஊடாக காண்டுசெல்லவேண்டும்.

0 commentaires :

Post a Comment