கடந்த பாரிய வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான சேதத்திற்குள்ளாகியிருந்தது. எப்போதுமில்லாத அளவிற்கு மட்டக்களப்பு நகரை முழுமையாக வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் வெள்ள நீர் வடிந்தோடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனைக் கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டபுத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்து கடந்த 50வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டபோது வெள்ள நீரை நாவலடி பாதையினை ஊடறுத்து வெளியேற்றியிரந்தார்கள். அதே போல் கிழக்கு மாகாண முதலமைச்சரும் நாவலடி பாதையினை ஊடறுத்து மட்டக்களப்பு நகரைச் சூழ்ந்திருந்த வெள்ள நீரை வெளியேற்றினார். ஒரிரு நாட்களிலே வெள்ள நீர் முழுமையாக வடிந்தோடியது.
வெள்ள நீர் மிக வேகமாக வடிந்தோடியதன் காரணமாக நாவலடிக்கான பாதை கிட்டத்தட்ட 100 மீற்றர் அளவு சேதமாக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியது. இதனைக் கருத்திற் கொண்ட முதலமைச்சர் சந்திரகாந்தன் மீண்டும் அப் பாதையினை முழுமையாக புனர்நிர்மானம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கான ஆரம்ப வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. நடைபெற்று வரும் ஆரம்ப வேலைகளை முதலமைச்சர் சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.
0 commentaires :
Post a Comment