3/13/2011

திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் த.ம.வி.பு கட்சியே தகுந்த தலைமைத்துவம் கொடுக்கும்- கி.மா.உ.பூ.பிரசாந்தன்

prasanthan-annan-photo
தமிழர்களின் கடந்தகால கசப்பான அனுபவங்களை ஜனநாயகப் பாதையில் தீhப்பதற்கு முன்வந்த கிழக்கின் தலைமைத்துவக் கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியாகும். எந்த விதமான அரசியல் பின்புலமும் இல்லாது, சுயலாபமும் கருதாது மக்களுக்கான சேவையினை நோக்காகக் கொண்டு தம்மையே ஆகுதியாக்கத் துணிந்த இளைஞர்களின் சங்கமமே இன்றைய தழிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தோற்றுவாய். தமிழர்களின் உரிமை, திட்டமிட்ட ஒதுக்கு முறை, திட்டமிட்ட குடியேற்றம், திட்டமிட்ட தட்டிக்களிப்பு என்ற வீரவசனங்களால் திட்டமிட்ட திட்டமிட்ட என்று குறிப்பிடும் தமிழ் தலைமைத்துவங்கள் தமிழர்களின் வலுவாக்கத்திற்கு எந்த வகையான தூரநோக்கான திட்டமிடல் செய்துள்ளனர் என்பதனை மக்கள் கேட்கவேண்டும். திட்டமிடாத கோரிக்கைகள், திட்டமிடாத போராட்டம், திட்டமிடாத கொள்கைகள் இதுவே தமிழ் தலைமைத்துவங்களின் கடந்தகால வீழ்சிக்கு காரணம். இவற்றினைப் பாடமாகக் கொண்டு செயற்படுத்த வேண்டிய சில தமிழ் தலைமைத்துவங்கள் இன்னும் திட்டமிடாதபடி விதண்டாவாதம் செய்வது வேதனைக்குரியது. மட்டக்களப்புடன் ஒப்பிடுகையில் திருகோணமலை மாவட்ட மக்களின் குறைகளைக் கூறுவதற்குக் கூட ஒழுங்கான தமிழ் தலைமைத்துவம் இல்லை என்பதனை யாரும் மறுக்க முடியாது.
இதனை நிவர்த்தி செய்யக்கூடிய வல்லமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு மாத்திரமே உண்டு. வெறுமனே பேசிவிட்டுப் போகும் விடயம் உணராத தலமைகளல்ல நாம் அரசியலிலும், சமூகத்திலும் நன்கு பாண்டித்தியம் பெற்ற அற்பணிப்புள்ள தமையின் பின்னால் நிற்பவர்கள். தமிழர்களுக்கு எங்கு கொடுமை நடந்தாலும் அஞ்சாது தட்டிக்கேட்கும் நெஞ்சுரம் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி திருகோணமலை மாவட்டத்திற்கும் நல்ல தலைமைத்துவங்களை வழங்கும் என கி.மா.உ. பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி சபைத்தேர்தல் பிரச்சாரப் பணிகளின் நிமிர்த்தம் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் வாழைத்தோட்ட கிராம மக்களுடனான பொதுக் கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாக்குகளைப் பெற்றுவிட்டு வாய்ச் சவால்களை விடுவது மட்டும் நொந்துபோயுள்ள மக்களுக்கு விடிவுகளைத் தேடித்தராது அனைவரும் உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் யதார்த்தமா சிந்திக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment