3/31/2011

திருக்கோவில் பிரதேச சபைக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்



 முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (29.03.2011) திருக்கோவில் பிரதேச சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரதேச சபை முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரதேச சபை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இவ்விசேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், விசேட ஆணையாளர் அழகரெட்ணம் மற்றும் செயலாளர் ஜிவாஜி மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள் ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment