3/29/2011

கடாபி பிறந்தகமான ~சிர்த்' மீது கூட்டுப்படை விமானத் தாக்குதல் முக்கிய நகரங்கள் கிளர்ச்சிப் படை வசம்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் பிறந்தகமான சிர்த்தின் மீது கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
அத்துடன் தலைநகரான திரிபோலி யிலும் கூட்டுப்படை வான் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. திரிபோலியில் பல்வேறு இடங்களிலும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.
லிபியா மீதான தாக்குதலின் முழு கட்டுப்பாட்டையும் நேட்டோ பொறுப் பேற்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் குறித்து லிபிய செய்தித் தொடர்பாளர் மெளஸா இப்ராஹிம் கூறுகையில், நகரின் மீன்பிடி துறைமுகப் பகுதியில் நடைபெற்ற கூட்டுப்படை தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட அந்தப் பகுதியில் எந்த இராணுவ செயல்பாடுகளும் இருக்க வில்லை. தலைநகர் திரிபோலியில் கூட்டுப்படையினர் தாக்குதல்களை நடத்தினர் என்றார்.
அத்துடன் கடந்து ஒருவார காலமாக கூட்டுப்படை லிபியா மீது நடத்தும் தாக்குதலால் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக லிபிய அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்த தகவலை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை லிபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிர்த்தையும் கைப்பற்றியதாக கிளர்ச்சிப்படை நேற்று அறிவித்தது. கிளர்ச்சிப்படை நேற்று அதிகாலை 1.30 க்கு சிர்த்துக்குள் நுழைந்ததாகவும் அந்த பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் எதிர்க் கட்சிகளின் தேசிய கெளன்சில் பேச்சாளர் ஷம்ஸ் அப்துல் டிலா கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர் களின் தலைமையகமான பெங்காசியில் துப்பாக்கிகளை வனத்தை நோக்கி சுட்டு கிளர்ச்சியாளர்கள் தமது வெற்றியை கொண்டாடியதாக அங்கிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் கூறியுள்ளார்.
எனினும் சிர்த் பகுதியில் கடாபி ஆதரவுப்படை தொடர்ந்து நிலைகொண் டுள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது.
ஏற்கனவே லிபியாவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜ்தபியா, பிரேகா, ராஸ் லனூப் உகைலா, பின் ஜவாத் ஆகிய நகரங்களில் இருந்து கடாபி ஆதரவுப் படைகள் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சியாளர் கள் தெரிவித்தனர்.
அந்தப் பகுதிகளில் குவிந்த கடாபியின் எதிர்ப்பாளர்கள், துப்பாக்கியால் வான த்தை சுட்டு தங்கள் வெற்றியைக் கொண்டாடினர்.
லிபிய இராணுவத்தின் மூத்த தளபதி ஜெனரல் பில்காஸிம் உட்பட ஏராளமான இராணுவ வீரர்களை, கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தி ருப்பதாகவும் அல்-ஜkரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்க மளித்துள்ள லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க கூட்டுப்படை யினரின் தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப் பைத் தடுக்க சில நகரங்க ளில் படைகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிஸ்ராட்டா நகரில் சந்தேகப்படும் நபர்களை கடாபி படை யினர் சுட்டுக் கொல்வதாக உள்ளூர் வாசிகளை மேற்கோள் காட்டி அல்-ஜkரா செய்தி வெளியிட் டது. உயரமான கட்ட டங்களில் நிறுத்தப்பட்டி ருக்கும் இராணுவ வீரர்கள் சாலைகளில் செல்லும் மக்களை சுட்டு வீழ்த்துவ தாக அல்-ஜkரா ஒளிபரப் பில் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
லிபியா இராணுவ முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்ஸ் படைகள் நடத்திய தாக்குதலில் லிபிய இரா ணுவத்தின் 5 போர் விமானங்கள் 2 ஹெலிகொப்டர்கள் முழுவதும் சேதமடைந் தன. பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 இராணுவ டாங்கிகள் உடைத்து நொறுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலைநகர் திரிபோலி மட்டும்தான் அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனைய பல பகுதிகளிலும் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதோடு கடாபி ஆதரவுப் படையினர் முன்னகர விடாமல் கூட்டுப் படையினர் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை இராணுவத்தை பயன்படுத்தி லிபியா ஆட்சியாளர் முஅம்மர் கடாபியை கொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு ஜனாதிபதி ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் “லிபியாவின் வான் பகுதி நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
1973 ஆம் ஆண்டின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். இராணுவத்தை பயன்படுத்தி லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை. ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது” என ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ஒபாமா, “லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கியுள்ளது. லிபியாவுக்குள் இராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை.
எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில் அரபு நாடுகளான கட்டார் மற்றும் யு.ஏ.ஈ. ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு இந்த வார ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும்.
கடாபியின் படைகள் பின் வாங்கி மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க சர்வதேச சமுதாயம் முன்வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை” என்றார்.
இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், “லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறை முகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன.
ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப் படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. திரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர் களின் கையில் உள்ளது. அஜ்தாபியாவில் தொடர்நது தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல் மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள் மீது கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்றார்.
இதேவேளை தம்மை கற்பழித்ததாக லிபிய பெண் ஒருவர் செய்த முறைப் பாட்டை அடுத்து கடாபி ஆதரவுப் படையின் இருவர் கைது செய்யப்பட்டனர். அரச இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தம்மை கற்பழித்து கொடுமை செய்ததாக இந்த பெண் முறையிட்டுள்ளார். இது குறித்து திரிபோலியில் உள்ள ரெக்சோன் ஹோட்டலில் மேற்படி பெண் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க இருந்தார். எனினும் அந்த பெண் அரசு சார்பானவர்களால் தடுக்கப்பட்டா

0 commentaires :

Post a Comment