3/07/2011

அறிவும் அதிஸ்டமும் போட்டி நிகழ்வில் கிழக்கு முதல்வர் பங்கேற்பு

dsc_01161DSI கொம்பனிபனியின் ஏற்பாட்டில் ITN அனுசரணையுடன் திருமலை பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெறும் அறிவும் அதிஸ்டமும் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் கலந்து கொண்டார். திருமலை உவர்மலை விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் பிரதம அதிதியாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் சிறப்பதிதியாகவும் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ,ITNதொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


0 commentaires :

Post a Comment