அம்பாரை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கஞ்சிகுடியாறு கிராமத்திற்கு இன்று சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அங்குள்ள மிகப் புராதனம் வாய்ந்த சக்தி மிக்க முருகன் ஆலஙயத்திற்குச் சென்று தரிசித்ததோடு அங்கள்ள மக்களுடன் ஒரு சிறிய கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தார்.
யுத்த காலத்தில் முழுமையாக புலிககளின் கட்டுப்பாட்டிலிருந்த அப் பிரதேசம் தற்போததான் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் அதுவும் முழுமையாக இடம்பெறாத நிலையில் அங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் .அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட மதலமைச்சர் உடனடியாக பாடசாலை மற்றும் மீளக்குடியமர்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளைப் பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment