கலாசார ரீதியான நாட்டுப்புற கலை வடிவங்களின் கொண்டாட்டமான யாழ்ப்பாண இசை விழா 2011 நிகழ்வு நேற்று காலை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் ஆரம்பமாகி இன்றும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெறும் இந் நிகழ்ச்சியை நேற்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவின் மூலமாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் நாடு முழுவதிலுமுள்ள கலாசார ரீதியான நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
தூய நாட்டுப்புறக் கலை, மருவிய நாட்டுப்புறக் கலை மற்றும் கலாசார இசை என்பன ஒன்றிணைந்த வகையில் இந்த விழா நடைபெறுகின்றது.
இவ்விழாவில் இலங்கையிலிருந்து 23 உள்நாட்டுக் குழுக்களும், இந்தியா, நேபாளம், பாலஸ்தீனம், தென் ஆபிரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 சர்வதேச நாட்டுப்புறக் குழுக்களும் கலந்து கொண்டுள்ளன.

0 commentaires :
Post a Comment