3/26/2011

முஸ்லிம் சமூகத்துக்கும் அரசியல் தீர்வு அவசியம்: ஆடு நனைகிறது என்று ஓநாயாக அழும் மாவை சேனாதிராசா

தமிழ் சமூகத்தைப் போன்றே முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் முஸ்லிம்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது அதனை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் சுயாட்சி என்ற கோட்பாடு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு முன்பும் தந்தை செல்வநாயகத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும் தமிழர்களைப் போன்றே மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தமிழ்மக்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழத் தயாராக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  மக்கள் அமைதியாக வாழுவது குழப்பவாதிகளுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை இனங்களை கூறு போட்டு அரசியலில் குளிர் காய்வதில் ஐம்பது வருடங்களை ஒட்டிவிட்ட இனவாதிகளுக்கு மக்களை கூறு போட்டு தமிழன்  சிங்களவன்  முஸ்லிம் என்ற கோசங்களை விட்டால் பேசுவதற்கு வேறு எதுவும் கிடைப்பதில்லை இந்த கிழட்டு புலி மாவை இன்று முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்  புலிகள் முஸ்லிம்களை படாதபாடு படுத்திய போதெல்லாம் வாய் மூடி கள்ள மௌனம் காத்தவர்கள் இவர்கள். ஒரு லட்சம் முஸ்லிம்களை புலிகள் ஆடு மாடுகளை துரத்துவதுபோல் துரத்தியடித்த போது ஒரு வார்த்தை பேசாத இந்த மாவை, பள்ளிவாசல் படுகொலைகளால் இரத்தாறு ஓடிய போதெல்லாம் பொத்திய வாய் திறக்காத இந்த மாவை இப்போது முஸ்லிம்களுக்கு சுயாட்சி கேக்கின்றார் . 
 முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதை முஸ்லிம்கள் தீர்மானிப்பார்கள். முஸ்லிம்கள் சுயாட்சி கேட்டகாலத்தில் தனித்தரப்பு கேட்டகாலத்தில்  அவர்களை துரோகி என்பதும், நாங்கள் போராடி உங்களுக்கு உரிமையா?  என்று நியாயம் பேசிய இவர்கள், பு லிகளே எல்லாருக்கும் ஏகபிரதிநிதிகள் என்று  தற்குறி பிரபாகரனிடம் தஞ்சம் அடைந்த தரித்திரம் பிடித்த இந்த கூட்டம், புலிகளின் மேடைகளில் அவர்களுக்கு துதி பாடி  திரிந்த  மாவை போன்றோர் இன்று முஸ்லிம் களுக்காக அழுவதன் உள்நோக்கம் வேறு. கிழக்கு வடக்கு மாகாணங்களில் முஸ்லிம் ,தமிழ் ,ஏன் சிங்களவர் என்ற வேறு பாடு ஏதுமின்றி மக்கள் ஒன்றாக வாழ தலைப்பட்டு விட்டனர். கிழக்கு மாகாணத்தில்  தனி அலகு, சுயாட்சி கேட்ட முஸ்லிம்கள் இப்போது தமிழர்களுடன் இணைந்து கிழக்கு மாகாணசபையை கூட்டாக ஆளுகின்றனர்.
 இந்த தமிழ் தேசிய வாதிகள் யாருமே எதிர்பாக்காத இன ஒற்றுமை கிழக்கில் ஏற்பட்டு விட்டது சிங்களவனை காட்டி  காட்டி  ஒரு புறம் முஸ்லிம்களை காட்டி காட்டி மறுபுறமுமாக தமிழர்களை தனியே பிரித்தெடுப்பதே இப்போது மாவை போன்றவர்களின் தேவை .அதற்காகவே முஸ்லிம்களை சுயாட்சி ஆசை காட்டி உசுப்பி விட முனைகின்றார்கள். இதுபோன்ற கருத்துகளிற்கு எதிராக முஸ்லிம் தலைமைகள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்க  வேண்டும். இனஉணர்வுகளை கிளறி அரசியல் பண்ண மீண்டும் முனைகின்ற தமிழ் இனவாதிகளையிட்டு அனைவரும் விழிப்படைய வேண்டும் .தமிழ் மக்களுக்கு சரியான வழிகாட்ட வக்கில்லாத இந்தகூட்டமைப்பு மந்தைகள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பார்களாம் இந்த போக்கிரிகளை நிராகரிக்க எமது மக்கள் தயாராகாத வரை இலங்கைக்கு விமோசனமே கிடையாது                                                           

0 commentaires :

Post a Comment