3/24/2011

இறைமை, சுதந்திரம், மக்கள் அபிலாஷை, ஜனநாயக உரிமைகள் லிபியாவை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை ஆதரவு

லிபியாவின் இறைமை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை அரசு பூரண ஆதரவை வழங்குமென அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

லிபியா மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது
- ஜP.எல்.பீரிஸ்

மேற்குலக தலையீடு அரபு, முஸ்லிம் உலகுக்கு அச்சுறுத்தல்
- ஏ.எச்.எம்.அஸ்வர்

லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே இலங்கை அரசு விரும்புகிறது என வெளிவிவகார அ
மைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
லிபியா மீது மேற்குலக நாடுகள் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து நேற்று பாராளுமன்றத்தில் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்துப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும் லிபியாவுக்கும் இடையே நீண்ட காலம் நெருக்க மான உறவுகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே அங்கு நடத்தப்படுகின்ற தாக்குதல்களை கண்டித்தும் அந்த மக்களுக்கு ஆதரவாகவும் இன்று ஒன்றுகூடி இருக்கின்றோம்.
எந்தவொரு நாட்டிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. அவர்கள் பாதிக்கப்படும் போது அதற்கு தலையிடும் விதத்தில்தான் ஐ. நா. பாதுகாப்பு சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், ஐ.நா.வின் இந்த கொள்கைக்கு ஏற்றவாறுதான் லிபியாவில் நடை பெறுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்குலக நாடுகள் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை களை மதிக்காமல் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றன. லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் தீர்வாக அமையாது.
லிபியாவின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான பேச்சு நடத்த முடியுமாக இருந்தது. எனினும் இந்த நாடுகள் இவற்றில் ஆர்வம் காட்டவில்லை. ஐ. நா. செயலாளர் நாயகம் ஒரு பிரதிநிதியையும் லிபியாவுக்கு அனுப்பி இருந்தார்.
முன்னதாக ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உரையாற்றினார். அவர் கூறியதாவது,
லிபியா மீது மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கும் லிபியாவின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களே தீர்மானிப்பதற்கான லிபிய ஜமாஹிரிய மக்களின் கெளரவத்தையும், கண்ணியத் தையும் சுய விருப்பத்தையும் அங்கீ கரிப்பதற்கு எல்லா அரசாங்கங்களும் எல்லா மக்களும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
அவர் மேலும் குறியதாவது, தற்போது லிபிய ஜமாஹிரிய்யா மீது மேற்கொள்ளப்படும் இராணுவத் தாக்குதல் உலகெங்கிலும் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்குலகக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள் ஏற்கனவே மனித உயிர்களின் இழப்பையும் வணக்க தலங்கள் மற்றும் ஏனைய கட்டடங்களுக்கு அழிவையும் ஏற்படுத்தியுள்ளன.
லிபியாவில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளின் இராணுவத் தலையீடு பாரிய அமளியை ஏற்படுத்தியுள்ளது. இது ஐ.நா. சாசனத்தை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்களின் மரணத்துக்குப் பொறுப்பான இந்த நாடுகளில் சில பலஸ்தீனிய மக்கள் மீதான அட்டூழியங்களும் புரிகின்றன.
அப்பாவிப் பலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்கள் படுகொலை செய்வதை இவர்கள் கண்டு களிக்கின்றனர். லிபியாவின் எண்ணெய் வளத்தைப் பெறுவதற்காகவும் அந்தப் பிராந்தியத்தில் பலமான இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்துவதற்கும் லிபியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவத் தலையீடு எதிர்காலத்தில் அரபு மற்றும் முஸ்லிம் உலகுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையும் என சர்வதேச ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
வேண்டுமென்றே மேற்கொள் ளப்படும் இந்த மனித உரிமை மீறல் மற்றும் ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை பற்றிய ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறுதல் ஆகியவை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை பாரிய சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
எனவே, லிபியா மீது மேற்குலகக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கும் தமது எதிர்கால நடவடிக்கைகளை தாங்களே தீர்மானிப்பதற்கான லிபிய ஜமாஹிரிய மக்களின் கெளரவத்தையும் கண்ணியத்தையும் சுய விருப்பத்தையும் அங்கீகரிப்பதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என எல்லா மக்களையும் அரசாங்கங்களையும் இந்தப் பாராளுமன்றம் வேண்டுகின்றது.
லிபியாவிலுள்ள எண்ணெய் வளத்தை சூறையாடும் நோக்கத்துடன் தான் இந்த தாக்குதல்களை மேற்குலக நாடுகள் நடத்துகின்றன. லிபியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கரிசனை ஏன் அவர்களுக்கு வந்தது.
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இன்று எமது ஜனாதிபதியின் நண்பர்களாக உள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் தாற்பரியமே மத்திய கிழக்கு நாடுகள் நண்பர்களாக ஆவதற்கு பிரதான காரணமாகவும் எமது ஜனாதிபதியுடன் நண்பர்களாக இருக்கும் எவரையும் ஐ. தே. கவுக்கு பிடிக்காது. லிபியத் தலைவரையும் ஐ. தே. க எம்.பி. ரவி கருணாநாயக்க விமர்சித்தார்.
சுய மரியாதையுடன் ஆட்சி மாற்றத்தை அந்த மக்களே தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதில் மேற்குலக நாடுகள் தலையிட்டு தாக்குதல்களை நடத்த தேவையில்லை. பல ஊடக அமைப்புகள் லிபியா மீதான தாக்குதலை கண்டித்துள்ளன. ஆஸ்பத்திரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்குச் சார்பான ஆட்சியை கொண்டுவரவே முயற்சி நடக்கிறது. உலமா சபையும் லிபியா மீதான தாக்குதல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக சமாதானத்திற்கு நாம் பிரார்த்திக்க வேண்டும். குர்ஆனில் இறைவன் கூறுகிறான். இறைவன் தவறு செய்பவர்களை தண்டிப்பான். பலம்வாய்ந்த நாடுகளுக்கும் இந்த நிலை ஏற்படும்.
லிபியா நீண்டகாலமாக இலங்கையுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது. அந்த நாடு தொடர்ந்து உதவி வருகிறது- லிபியா மீது மேற்கொள்ளப்படும் அநீதிக்கு எதிராக அனைவரும் எழுந்துநிற்க வேண்டும்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து எமது நாடு முழு உலகிற்கும் முன்மாதிரியாக செயற்பட்டது. லிபியா மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

0 commentaires :

Post a Comment