இலங்கையின் முதலாவது நிலக்கரி அனல் மின் நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று மாலை சுப நேரத்தில் நுரைச்சோலையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்த மின்னுற்பத்தி நிலையத்தை அங்குரார்ப்ணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று மாலை சரியாக 5.40 மணியளவில் மின்னுற்பத்தி நிலையத்திற்கென நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இறங்கு துறைக்கு முதலில் வருகை தந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையைத் தொடர்ந்து கடற்படையினரின் அதிவேக விசேட இயந்திரப் படகுப் பிரிவினர் படகுகளில் சாகசங்களில் ஈடுபட்ட வண்ணம் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தி வரவேற்றனர். கடற்படையினரின் 12 அதிவேக படகுகள் இந்த சாகசங்களில் பங்குபற்றின. ஒரு படகுக்கு மூன்று கடற்படை வீரர்கள் என்றபடி இதில் பங்குபற்றினர்.
இதனைத் தொடர்ந்து லக்விஜய மின்னுற்பத்தி நிலையம் எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்த மின்னுற்பத்தி நிலைய த்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் சரியாக மாலை 5.50 மணியளவில் ஆரம்பமாகின. இந்தியாவிலிருந்து விஜயனும் அவரது தோழர்களும் கடல் வழியாக படகில் வந்து புத்தளம், தம்பபன்னியில் கரையேறி இலங்கைக்குள் வருகை தந்தனர்.
அந்நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகில் வந்தவர்கள் இந்த அனல் மின் நிலையத்திற்கென அமைக்கப்பட்டிருக்கும் இறங்கு துறையில் கரையேறி இத்தேசிய வைபவத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு குறித்து அறிவிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் நினைவு படிகத்தைத் திறந்து வைக்கும் இடத்திற்கு ஜனாதிபதி அவர்கள் குதிரை வீரர்கள் அணி வகுத்து முன்செல்லும் வகையில் அழைத்து வரப்பட்டார். அவர் சரியாக மாலை 6.25 மணியளவில் விசேட மின்சார பொத்தானை அழுத்தி நினைவுப் படிகத்தைத் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து இத்தேசிய வைபவத்தின் நிமித்தம் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடைக்கு ஜனாதிபதி அவர்கள் மேளதாள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டார். இந்த அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகாவார்ட் மின்சாரத்தை தேசிய மின்சாரத்தோடு ஜனாதிபதி அவர்கள் சரியாக இரவு 7.00 மணியளவில் அதற்கென அமைக்கப்பட்டிருந்த விசேட மின்சார பொத்தானை அழுத்தி உத்தியோகபூர்வமாக இணைத்தார்.
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் முதலாவது நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் இதுவேயாகும். மூன்று கட்டங்களை கொண்டிருக்கும் இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அதன் மூலம் 300 மெகா வார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று கட்ட நிர்மாண பணிகளும் பூர்த்தியானதும் 900 மெகா வார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கின்றது.
இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகளுக்கென 891 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை சீன அரசாங்கம் குறைந்த வட்டி வீததத்தில் நீண்ட கால கடனடிப்படையில் எக்ஸிம் வங்கி ஊடாக வழங்கியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம் மின்னுற்பத்தி நிலையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 5300 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக 11,000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடவிருக்கின்றது.
இத்தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றுகையில், எந்தவொரு நாட்டினதும் துரித அபிவிருத்திக்கு மின்னுற்பத்தி நிலையங்கள் மிகவும் இன்றியமையாதவை. அதனைக் கருத்திற்கொண்டே இம்மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகளை துணிந்து முன்னெடுத்தோம். நாம் முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் பயனாக இப்பிராந்தியத்தில் தினமும் 24 மணி நேரமும் தொடராக மின்சாரம் வழங்கும் நாடு என்ற பெருமையை நாம் பெற்றுள்ளோம் என்றார்.
கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்தேசிய வைபவத்தில் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜோன் செனவிரட்ண, மகிந்தானந்த அளுத்கமகே. பிரியங்கர ஜயரட்ன, பிரதியமைச்சர்கள் தயாசிறி திசேரா, பிரேமலால் ஜயசேகர, வட மேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment