சுவிஸ் முனைப்பு நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதாக முனைப்பு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 23 மாணவர்களுக்கு சனிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் வைத்து முனைப்பின் தலைவர் கு.அருணாசலம் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்டுள்ள இம்மாணவர்கள் தங்கள் பல்கழைக்கழக படிப்பை முடிக்கும் வரையில் மாதாந்தம் புலமைப்ப்பரிசிலை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடத்துக்கான இத்திட்டத்தில் திருமலை,மட்டக்களப்பு,அம்பாறைமாவட்டங்களைச்சேர்ந்த தமிழ் ,முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நாளடைவில் ஏனைய மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
முனைப்பு நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு ஏற்கனவே புலமைப்பரிசில்களை வழங்கிவருகின்றது. இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் சிந்தனையில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனம் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஏற்கனவே உணவுப்பொருட்கள், பால்மா, மருந்துப்பொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி வைத்ததுடன், மாணவர்வளமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா செலவில் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்
0 commentaires :
Post a Comment