முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் இன்று 06.03.2011 ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூமரத்தச்சேனை கிராமத்தில் உள்ள மக்களுக்கே மேற்படி நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் த.ம.வி.பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான.பிரசாந்தன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைசச்சரின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரச்சாரச் செயலாளருமான ஆஸாத் மௌலானா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment