மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிகப் பெரிய குளமான கட்டுமுறிவுக் குளம் மற்றும் ஆண்டான் குளம் என்பன உடனடியாக புனரமைக்கபடும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று அப் பிரதேசத்திற்குச் நேரடி விஜயம் செய்த அவர் அப் பிரதேச மக்கள் மற்றும் பிரதேச செயலாளருடன் பேசியதற்கமைவாக கடந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக குறித்த இரு குளங்களும் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அப் பிரதேச விவசாயிகள் பெருங்கஸ்டத்தினை எதிர் கொள்கின்றார்கள். மேற்படி பிரச்சினையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றமையையடுத்து அங்கு நேரில் சென்று அவ்விரு குளங்களையும் பார்வையிட்ட முதலமைச்சர் இரு குளங்களையும் வெகு வரைவில் புனரமைத்து தருவதாக அப் பிரதேச மக்களிடம் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment