தங்களிடம் எந்தவொரு கொள்கையுமே தற்போது இல்லை. தமிழ் மக்களுக்கான உரிமை, தேசியம், தமிழீழம் என்றெல்லாம் ஓர் மாயையை தோற்றுவித்து அதனூடாகவே தங்களது அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக்கொண்டிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொன்றுதொட்டு வந்த பழக்கதோசமாகும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு, கொள்கை, உரிமை என்றெல்லாம் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் தங்களிடம் எந்த கொள்கையுமே இல்லை என்பதனை இலங்கையிலிருந்து வெளியாகும் ஓர் தினசரி பத்திரிகையின் வாயிலாக தெரிவித்திருந்தார்கள்.(21-03-2011) அன்றைய பத்திரிகையாக இருக்கவேண்டும். அப்பத்திரிகையில் ஓர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார் “தமிழ் மக்களுக்கான தீர்வை அரசே முன்வைக்க வேண்டும்” எனக் கேட்டிருந்தார்.
உண்மையில் அவர்களிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இருந்தால் இந்த தேர்தல் வெற்றியோடு அரசுடன் பேசி அதனை பெறறிருக்கலாமே. அதனைவிடுத்து ஏன் அரசுதான் மக்களுக்கான தீர்வை முன்வைக்கவேண்டும் எனக்கேட்டிருந்தார். தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வும் அவர்களிடம் இல்லை. அதனால்தான் அவர்கள் இன்றும் தீர்வு விடயம் தொடர்பாக அதாவது மக்களுக்கான தீர்வு உரிமை, என்றால் என்ன? என்கின்ற பதங்களுக்கு விளக்கம் கொடுக்காமல் மௌனித்துப்போய் இருக்கிறார்கள். இது மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு விடயம்தான்.
இத்தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிடுகின்றார்கள் தங்களுக்கு அமோக ஆதரவினை மக்கள் வழங்கி இருக்கிறார்கள் என்று கொக்கரிக்கிறார்கள். மக்கள் தொடர்ந்தும் தங்களை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனவும் அம்மக்களுக்கான அனைத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் பெற்றுத்தரும். அதனை உணர்ந்துதான் மக்கள் மீண்டும் தங்களுக்கு ஆணை வழங்கி இருக்கிறார்கள் என கூக்குரலிடும் இக்கூட்டமைப்பின் கீழ்த்தரமான ஓர் செயலை உங்களுக்கு தெரியப்படுத்தியே தீரவேண்டும்.
நடந்த முடிந்த உள்ள+ராட்சி மன்ற தேர்தலிலே கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலே தேர்தல் நடைபெற்ற அனைத்து சபைகளையும் தாங்களே கைப்பற்றிவிட்டோம் என கனத்த குரலில் ஊழையிடும் இந்த குள்ள நரிக்கூட்டத்தின் கீழத்தரமான நடவடிக்கை என்னவென்றால் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலே ஒவ்வொரு வீடுகள் தோறும் தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் இறுவட்டுக்களை வழங்கி இருக்கிறார்கள். அந்த இறுவட்டுக்களிலே கருணா, பிள்ளையான் இருவரும் துரோகிகள் இவர்கள் பிரதிநிதுவப்படுத்தும் கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே நீங்கள் வாக்களியுங்கள். ஏன பிச்சை கேட்டிருந்தார்கள். அதாவது ஒரு இயலாதவன் தனது குறைகளை எடுத்துக்கூறி மற்றவரிடம் உதவி (பிச்சை) பெறுவதைப்போன்று இந்த குள்ளநரிக்கூட்ட கூத்தமைப்பு கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தக்காட்சிகள் மற்றும் யுத்தகளத்தில் மக்கள் காயமடைந்திருந்த அவலக்காட்சிகள் அதனை ஒளிப்பதிவு செய்து ஒவ்வொரு வீடு வீடாக பிச்சை எடுத்துதான் தாங்கள் வென்றிருக்கிறார்கள். இந்த உண்மை உலகிற்கு தெரியாது. இதனை ஆதாரப+ர்வமாக வெளிக்காட்டுகிறோம்.
இக்கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தங்களது தேர்தல் வெற்றியினை மாத்திரம்தான் குறிவைத்து செயற்படுகிறார்கள். 1976 ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த தேர்தலில் தாங்கள் தோல்வியடைந்துவிடுவோம் எனக்கருதி 1975 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையிலே தமிழீழ பிரகடனத்தை கொண்டுவந்து அதனூடாகவே தேர்தலிலே அமோக வெற்றி பெற்றார்கள். அதேபோல இந்த ஆண்டு நடந்துமுடிந்த உள்ள+ராட்சி மன்ற தேர்தலிலே எமது உறவுகளின் விகாரக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்து அதனூடாக அனுதாபம் பெற்று வாக்குகளை சேகரித்தார்கள். அன்றைய வாக்கு சேகரிப்பின் விளைவுதான் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வாயிலாக வந்த தமிழீழப்போராட்டம் அதனால் ஏற்பட்ட இழப்புக்களை இன்றும் எம்மால் ஈடுசெய்ய முடியாதுள்ளது.
அதேபோன்றுதான் இம்முறை எமது சகோதரர்களின் அவலக்கோலங்களையும் விகாரக்காட்சிகளையும் காண்பித்து உள்ளு+ராட்சி சபைகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பதில் சொல்லுமா? அன்பு நெஞ்சங்களே சிந்தியுங்கள்! இவ்வளவு காலமும் எம்மை தங்களது அரசியல் இருப்பை தக்கவைக்க எவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாக்கி இருகக்pறார்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனை பின்னோக்கி சற்று சிந்தித்து பாருங்கள்.
இன்று இலங்கையிலே கிழக்கு மாகாணத்தை எடுத்துகொண்டால் ஓர் தமிழன் முதலமைச்சர். அவரை கேலி செய்வதும் கொலைகாரன் என்றும் கொள்ளைக்காரன் என்றும் இரத்தக் கறை படிந்தவன் என்றும் பலவாறு தூற்றுகிறது இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊதுகுழல இணையத்தளங்கள். இவர்கள் சற்று சிந்திக்கவேண்டும். கிழக்கிலே ஓர் தமிழன் முதலமைச்சர் அதேபோல வடக்கிலே ஓர் தமிழரை முதலமைச்சராக வர முயற்சியுங்கள். உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொண்டு உங்களது பிரச்சினைகளை தீர்த்துகொள்ளுங்கள். அதனை விடுத்து முதலமைச்சர் பதவி துறக்க வேண்டும், அடாவடித்தனம் செய்கின்றார் என்று கூறுகிறார்கள். கிழக்கில் தற்போதைய உண்மைநிலை என்ன? இந்த முதலமைச்சர் இல்லாமல் போனால் மீண்டும் ஒரு தமிழன் முதலமைச்சராக வரமுடியுமா? தனித்தமிழர் வாழும் மாகாணமா? சனத்தொகை பரம்பல் என்ன? இதெல்லாம் தெரியாமல் புள்ளிவிபரங்கள் இல்லாமல் எழுந்தமானமாக விதண்டாவாதம் புரியும் இக்கூட்டமைப்பினர் இதுபோன்ற விடயங்களை சிந்திக்கவேண்டும்.
இத்தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்குமாகாணத்தை ஆட்சி செய்கின்றவர்கள் இரத்தக்கறை படிந்த மனிதர்கள் என தொடர்ந்து கூறிய வண்ணமே இருக்கின்றார்கள் அவர்கள் தங்களது அரசியல் கட்சியின் பின்புலத்தை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக உள்ள இரா.சம்பந்தன் தனது பதவிக்காக அப்போது திருகோணமலை மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்திய தமிழ் நாடாளுமன்ற உறுபப்pனர் தங்கத்துரை என்பவரை குண்டுவீசி கொலைசெய்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர் .அதேபோல் கிழக்கிலிருந்து எந்தவொரு தலைமைத்துவமும் தலைதூக்கக்கூடாது என்கின்ற வடக்கின் அடிநாதத்தை அடிப்படையாக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் வரிசையில் பலரை பழி தீர்த்தது இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசிர்வாதத்துடன்தான். எடுத்துக்காட்டாக கிங்ஸ்லி இராசநாயகம், மற்றும் ராஜன் சத்தியமூர்த்தி ஆகியோரின் படுகொலைகள் குறிப்பிட்ட சிலதே.
ஏன்? இப்போதும் இவர்களது கட்சியில் கூட்டணி வகிக்கின்ற செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் இதுபோன்ற பலர் செய்த கொலைகளின் எண்ணிக்கை எங்களுக்கு தெரியாதா? மக்களே சிந்தியுங்கள் கொலைக்கலாச்சாரத்தை வேரூன்றச்செய்த அரசியல் கட்சி எது? அத்தோடு அக்காலாச்சாரத்துக்கு உரமூட்டிய அரசியல் கட்சி எது? ஏன்பதையெல்லாம் நீங்கள் சற்று சிந்திக்கவேண்டும். அப்போதிருந்தே இவற்றையெல்லாம் புரிந்துவிட்டு தற்போது ஒன்றும் தெரியாததுபோல் கொலைக்கலாச்சாரம், இரத்தக்கறை என்பனவெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்டதென மக்களிடம் கோழைப்பிரச்சாரம் செய்யும் கூட்டமைப்பினருக்கு சாட்டையடி கொடுக்க சற்றும் தயங்காது வேகமாக எமது மக்கள் விரைந்து வரும் காலம் வெகு விரைவில்…… தொடரும்..
0 commentaires :
Post a Comment