3/12/2011

கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையில் த.ம.வி.பு கட்சி பிரதிநிதித்துவம் பெறும்

dsc_0033நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்லிலே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது மிகவும் எதிர்பார்ப்புடன் தனது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபைக்கான(ஓட்டமாவடி) உறுப்பினர்களை தெரிவு செய்தவற்காக மயிலங்கரைச்சை ,ஊத்துச்சேனை,புணானை,போன்ற கிராமங்களிலிருந்து வேட்பாளர்களைத் தெரிவு செய்து களமிறக்கி இருக்கிறது. இப் பிரதேச சபைக்கான தவிசாளர் பதவியைப் பெறுவது சற்றுக் கடினமானதாகும். ஆனால் தமிழ் பிரதேசங்களைப் பிரதிநிதித்தவப்படுத்துகின்ற உறுப்பினர்களை பெறமுடியும். அவ் உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று ஊத்துச் சேனைக் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே மேற் கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்திற்கான தனியான அரசியல் கட்சி எமது கட்சியாகும். இவ்வளவு காலமும் எமக்குத் தெரியாமலே தமிழ் கட்சி என்று கூறப்பட்ட தமிழ் தேசிய கூட்டடைமைப்பினை நாம் ஆதரித்து வந்துள்ளோம். ஆனால் தற்போது கிழக்கிற்கான தனியான கட்சி ஒன்று உதயமாகி இருக்கும் இவ் வேளையிலே நாம் ஏன் வேறு கட்சிகளை ஆதரிக்க வேண்டும். ஒரு சில தமிழ் அரசியல் வாதிகள்; எங்களது கட்சியை விமர்சனம் செய்கின்றார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகின்றேன். எமது மக்களை நாமே பாதுகாக்க வேண்டும். நாமே அவர்களுக்கான அரசியல் இருப்பிடத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதைவிடுத்து எமது மக்களை தொடர்ந்து பலவீனப்படுத்தக் கூடாது. மேலும் மேலும் அவர்களை அசியல் அனாதைகளாக்க நாம் முன்வரக் கூடாது. முடியுமானால் கிழக்கை மையமாகக் கொண்டியங்குகின்ற கட்சியை பதிவு செய்து அதனூடாக எமது மகட்களுக்கு சேவை செய்ய முன்வரவேண்டும். அதனைவிடுத்து விதண்டாவாதம்  பேசுவதில் எதுவித பலனுமில்லை.
இன்னுமொரு அரசியல்வாதி அரசியல் ஞானம் சிறிதளவேனும் இல்லாது பல மேடைகளிலே முதலமைச்சர் பதவி பற்றியும் அவருக்கான அதிகாரங்கள் பற்றி எமது கட்சிபற்றியும் அவதூறான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருக்கு நன்றாகத் தெரியும் எமது கிழக்கு மாகாணம் எவ்வாறான கஸ்டங்களை எதிர்கொண்டிருந்தது என்று, தற்போது எவ்வாறு அபிவிருத்தி கண்டு வருகின்றது என்றும் அவர் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் அநாகரிகமான முறையில் அரசியல் செய்யாமல் அவரும் ஓர் மத்திய அமைச்சர் தானே அவராலும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் அக்கறை காட்ட முடியும்தானே ஏன் அவர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது இல்லை. அபிவிருத்தி ஏதாவது செய்து விட்டு விமர்சனம் செய்தால் கவலை இல்லை. எதுவுமே செய்யாது மற்றவரையும் செய்ய விடாது தடுப்பது அவருக்கு பிரச்சினை இல்லை. அதனால் எமது மக்களுக்குத்தான் பாரிய பிரச்சினை .அதனை அவர் முதலில் உணர வேண்டும். கிழக்கு மாகாணசபைக்கான அதிகாரங்களை வழங்கக் கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருப்பவர்களில் அவரும் ஒருவர். கிழக்கில் இதுவரை இடம்பெற்றிருக்கின்ற அபிவிருத்திகளிலே முதலமைச்சரது பங்கு எந்தளவிற்கு இருக்கு என்பது அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு அவரது பங்கு எதுவும் இல்லை என்பது அதிகாரிகளுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் ஏன் அவருக்கும் நன்றாகத் தெரியும். இவ்வாறெல்லாம் இருக்கும் போது அவர்  கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி விமர்சிப்பது நகைப்புக்குரிய விடமாகும். அதற்காகவேண்டி அவரைப் போல் பொது மேடைகளிலே அநாகரிகமான முறையில் அரசியல் செய்ய வேண்டிய தேவைப் பாடு எனக்கும் இல்லை. எனது கட்சிக்கும் இல்லை என்பதனை மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். விளம்பரத்திற்காகவேண்டி அரசியல் செய்ய வந்தவன் நானும் இல்லை எனது கட்சியும் இல்லை என்பதையும் அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அவருக்குத் நன்கு தெரியும் இன்னும் ஓரிரு வருடங்களில் எமது கட்சி மிகவும் பலம்பெற்று விடும் அப்போது தனது நிரலை என்னவாக இருக்கும் என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் எங்களது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாமல் இவ்வாறு புலம்புகின்றார். மக்களுக்குத் தெரியும் யாரை ஆதரிக்க வேண்டும் என்று  அவர்கள் பதில் சொல்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
dsc_0060
dsc_0025

0 commentaires :

Post a Comment