3/09/2011

இலங்கை - கனடா நேரடி விமான சேவை

வரலாற்றில் முதல் முறையாக இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் அண் மையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த வாய்ப்பு இலங்கை க்குக் கிடைத்துள்ளது.
இதன்கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு வாரத்தில் 7 பயணங்களை கனடாவின் டொரொன்டோ விமான நிலையத்திற்கு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்த இணக்கப் பாட்டின் கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு கொழும்பி லிருந்து லண்டன் ஊடாக கனடாவின் டொரொன் டோ வரையில் பயணிகளைக் கொண்டு செல்வதற்கும் கொண்டுவருவத ற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கும் பாரிய நன்மைகள் ஏற்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
அவ்வாறே புதிய ஒப்பந்தத்தின் பயனாக இதுவரையில் இலங்கைக்கும் லண்டனுக்கும் இடையில் நிலவிவந்த வாரத்தில் 13 பயணங்கள் எதிர்வரும் பனிக் காலம் முதல் வாராந்தம் 21 பயணங்களாக அதிகரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
கோடைக் காலம் முதலே ஒரு பயண வாய்ப்பினை அதிகரிப்பதன் மூலம் அதனை ஆரம்பிப்பதாகவும் அவர் தெரி வித்தார். மேலும், பிரித்தானிய விமான சேவைகள் கம்பனியினால் இலங்கைக்கு பயணிப்பதற்காக புதிதாக மூன்று பிரித்தானிய கம்பனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளது.
பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரதரப்பு ஒப்பந்தங்களில், இலங்கை விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.வீ.பீ. ரஞ்சித் டி சில்வா மற்றும் ஐக்கிய இராச்சிய விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் சைமன் நைட் ஆகியோர் அண்மையில் கைச்சாத்திட்டனர்.

0 commentaires :

Post a Comment