தி. மு. க.வின் ஆறு அமைச்சர்கள் இன்று இராஜினாமா
சட்டசபைத் தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசில் இருந்து விலக தி. மு. க. முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஆறு தி. மு. க. அமைச்சர்களும் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்கின்றனர்.
அவர்கள் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இராஜினாமாக் கடிதத்தை கையளிக்கவு ள்ளனர். காங்கிரஸ் சார்பாக தி. மு. க.வுடன் இதுவரை சமரச முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 18 எம் பிக்களைப் பெற்றுள்ள தி.மு.க சார்பில் 6 பேர் அமைச்ச ரவையில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர்கள்
1. மு. க. அழகிரி 2. தயாநிதி மாறன்
பிரதி அமைச்சர்கள்
1. எஸ். எஸ். பழனிமாணிக்கம்
2. டி. நெப்போலியன்
3. எஸ். ஜெகத்ரட்சகன்
4. காந்தி செல்வன்
ஆகியோரே இராஜினாமாச் செய்கின்றனர். இத்தோடு காங்கிரஸ், தி.மு.க. ஏழு ஆண்டு கூட்டணி முடிவுக்கு வருகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிய ஆதரவினை தி.மு.க. மீளப் பெறுவதற்குத் தீர்மா னித்தது. அ.தி.மு.க.வுடனும், தே.மு. தி.க.வுடன் காங்கிரஸ் கட்சி தீவிர பேச்சுவார்த்தை நடத்தியமையே மத்திய கூட்டணியிலிந்து விலகு வதாக தி.மு.க.தீர்மானிப்பதற்கு கார ணமாக அமைந்தது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், மத்திய அமைச்சரவை யிலிருந்து தி.மு.க. அமைச்சர்கள் விலகுவது தொடர்பில் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவு ப்புக்களும் வெளியாகவில்லை. அதேநேரம், அமைச்சரவையிலி ருந்து விலகுவதாக தி.மு.க. அறிவி த்திருப்பதானது தமிழக காங்கிஸ் கட்சிக்கு மிகப் பெரிய நற்செய்தி என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடு வதா?அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா? என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் விரைவில் முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13ஆம் திகதி தேர்தல் நடை பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment