16 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணம் சுபாஷ் ஹோட்டல் நேற்று உத்தியோகபூர்வமாக உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள சுபாஷ் ஹோட்டலை கடந்த 1995ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொருட்டு இராணுவத்தினர் குத்தகைக்குப் பெற்றிருந்தனர். இதன் பின்னர் சுபாஷ் ஹோட்டல் இராணுவத்தினரின் 51வது படைப்பிரிவின் தலைமையகமாகச் செயற்பட்டு வந்தது.
இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்ட பின்னர் இராணுவத் தினர் வசமிருந்த தனியார் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக சுபாஷ் ஹோட்டலில் இயங்கிவந்த இராணுவத்தினரின் 51 வது தலைமையகம் கோப்பாய்ப் பகுதிக்கு மாற்றப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 57, சேர்ச் வீதி, வத்தளை எனும் விலாசத்திலுள்ள சுபாஷ் ஹோட்டலின் உரிமையாளரிடம் ஹோட்டல் நேற்று ஒப்படைக்கப்பட்டது. 30 அறைகளைக் கொண்ட சுபாஷ் ஹோட்டலின் ஒரு பகுதி சில மாதங்களுக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்டி ருந்தது.
அதேநேரம், யாழ்ப்பாணம் ஞானம் ஹோட்டல் உரிமையாளரிடம் ஒப்படைக் கப்பட்டிருந்த நிலையில், சுபாஷ் ஹோட்டலும் தற்பொழுது உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

0 commentaires :
Post a Comment