50 வருடங்களாக நீரில் மூழ்கப்பட்டிருந்த சுமார் 8500 ஏக்கர் காணிகளில் விவசாயம் மேற்கொள்ளும் பொருட்டு வடிச்சல் கால்வாய்கள் அமைக்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் கலந்த கொண்டுதுடன் அதிதிகளாக மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் விவசாய அமைச்சர் நவரெட்ணராஜா ஆகியோரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
0 commentaires :
Post a Comment