3/30/2011

குடிசன மதிப்பீட்டிற்கான பணிகள் ஆரம்பம் * இந்த வாரம் வீடுகளில் லேபல்கள் ஒட்டும் பணி * நாடு முழுவதும் 65,000 வலயங்களாகப் பிரிப்பு

குடிசன மதிப்பீட்டிற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புள்ளிவிபர வியல் திணைக்களப் பணிப்பாளர் எச். ஆர். குணசேகர தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதன்படி, இந்த வாரம் முதல் நாடு முழுவதும் உள்ள சகல வீடுகள், கட்டடங்கள் என்பவற்றை பதிவு செய்து மதிப்பீட்டு அடையாளங்கள் (லேபல்) ஒட்டும் பணிகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் இந்த வருட இறுதிக் காலாண்டில் குடிசன மதிப்பீடு நடத்தப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக சகல கட்டடங்கள், வீடுகள் என்பவற்றுக்கு இலக்கமொன்றை வழங்கி அவற்றில் லேபல் ஒட்டும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள சகல கிராமசேவகர்களுக்கும் விசேட பயிற்சி வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதி வரை லேபல்கள் ஒட்ட இருப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
சனத்தொகை கணிப்பீடு முடிவ டையும் வரை வீடுகளில் ஒட்டப்படும் ‘லேபல்’களை அகற்ற வேண்டாம் என புள்ளிவிபரவியல் திணை க்களம் பொதுமக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இதேவேளை, குடிசன மதிப்பீடு 65 ஆயிரம் அலகுகளாக பிரித்து முன்னெடுக்கப்பட உள்ளது. ஒவ் வொரு அலகிற்கும் ஒருவர் வீதம் 65 ஆயிரம் பேர் தொண்டர் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த வருட நடுப்பகுதியில் நியமிக்கப்படும் தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கில் சில பகுதிகளில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடையாத போதும் அது சனத்தொகை மதிப்பீட்டுக்கு தடையல்ல எனவும் புள்ளி விபரவியல் திணைக்களம் கூறியது. இடம்பெயர்ந்த மக்கள் அவர்கள் தங்கியுள்ள முகாம்களில் வைத்து கணிப்பிடப்பட உள்ளனர்

0 commentaires :

Post a Comment