சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலைகளை குளிரூட்டுவதற்காக நேற்று ஜப்பான் இராணுவத்தினர் விசேட விமானங்கள் மூலம் அங்கு நீர்பாய்ச்சினர்.
இதற்காக 11 விசேட விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஒரு விமானம் 7.5 டொன் கடல் நீரை தாங்கிச் சென்று அணு உலையில் பாய்ச்சுகின்றது.
நேற்று காலை 20 நிமிடங்களுக்குள் இவ்வாறு 4 விமானங்கள் அணு உலையில் நீர் பாய்ச்சியதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக 3 ஆவது அணு உலையை குளிர்விக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அணு உலை அதிக சூடேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த பணியும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி அளிக்கவில்லை என புகுஷிமா அணு உலையை பராமரிக்கும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விமானங்கள் மூலம் இவ்வாறு நீர்பாய்ச்சியபோதும் மேற்படி அணு உலைகளில் இருந்து மணிக்கு 3000 மைக்ரோ சீவட் அளவு கதிர் வெளியேறி வருவதாக அந்த நிறுவனம் கொயோடா செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க அணு சட்ட விதி ஆணைக் குழுவின் தலைவர் கிரகரி ஜாஸ்கோ கொஸ்ரஸ் சபையில் கூறியபோது புகுஷிமோ அணு மின் நிலையத்தின் 4 ஆவது உலை குளிர்விப்பதற்கு நீர் இல்லாத நிலையிலேயே தீப்பிடித்துள்ளதாக தெரிவித்தார். எனினும் ஜப்பான் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.
ஹெலிகொப்டர் மற்றும் விமானங்கள் மூலம் அணு மின் நிலையத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் நான்காவது அணு உலையில் குளிர்விப்பதற்கான போதிய நீர் இருப்பதாகவும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அங்கு சென்றுள்ள அமெரிக்க இராணுவத்தினர் புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு அண்டி 50 மைல் தூரத்திற்குள் செல்ல பென்டகன் தடை விதித்துள்ளது.
அதேபோன்று புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு 80 கிலோ மீற்றர் அப்பால் இருக்குமாறு பல நாடுகளும் ஜப்பானில் இருக்கும் தமது பிரஜைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இதேவேளை வெடித்த அணு உலைகளில் இருந்து அணுக் கதிர்வீச்சு காற்றில் வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த ஜப்பான் அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், கதிரியக்க பாதிப்புகள் ஜப்பான் மக்களுக்கு நீண்ட காலம் தொடரும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது பற்றி ஹொங்காங் பல்கலைக்கழக ரசாயனத்துறை விஞ்ஞானி லேம் சிங் வான் கூறியதாவது,
ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை வெடிப்புகளால் அந்நாட்டு மக்களுக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படும். கதிர்வீச்சை சுவாசித்தல், மற்ற பொருட்கள் மூலமாக உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படும். தைராய்ட், எலும்பு மற்றும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அழிவதால் வரும் ரத்த புற்றுநோய் ஆகியவை உண்டாகும் அபாயம் அதிகம்.
சிலருக்கு குறைந்த அளவில் கதிரியக்க தாக்குதலே புற்றுநோயை ஏற்படுத்தும். கதிரியக்கத்தின் அளவைப் பொருத்து ஆபத்தும் அதிகம். காற்றில் உள்ள ஈரப்பதத்தில் கலக்கும் கதிர்வீச்சு, அதிக பலத்துடன் பல மடங்காக விரிவடையும். அதை சுவாசிப்பவர்களின் நுரையீரலை நேரடியாக சென்றடையும்.
காற்றில் கதிரியக்கம் பரவியிருக்கும்போது மழை பெய்தால் மேலும் ஆபத்தை ஏற்படுத்தும். மண் மற்றும் நீர் நிலைகளில் மழை நீருடன் கதிரியக்கம் கலந்துவிடும். பயிர்கள், கடல் நீரை மாசுபடுத்தும். கதிரியக்கம் படிந்த நிலங்களில் மேயும் மாடுகள் மூலம் அவற்றின் உடலுக்குள் பரவி பல மடங்காக பெருகும். அந்த மாடுகளிடம் பெறப்படும் பாலின் வழியாக அதை குடிக்கும் குழந்தைகளை எளிதில் புற்றுநோய் தாக்கும். இவ்வாறு லேம் சிங் வான் கூறினார்.
கதிரியக்க ஆபத்து பற்றி சீனப் பல்கலைக்கழகத்தின் ஹாங்கொங் மருத்துவ அறிவியல் மையத்தின் பேராசிரியர் லீ டின் லேப் கூறுகையில், ‘காற்றில் கலக்கும் கதிரியக்கத்தின் சக்தியைவிட மழை பெய்யும்போது கடல், பூமியை வந்தடையும் ஆபத்துதான் அதிகம். குடிநீர் மாசுபடும். கடல் நீரில் கதிரியக்கம் கலப்பதால் உயிரினங்கள் அழியக்கூடும்.
காற்றில் கதிரியக்கத்தின் அளவை கணக்கிடுவோர், கடலில் கலந்துள்ளதை அளவிடாதது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார். இதற்கிடையே, அணு உலைகள் வெடிப்பால் காற்றில் கலந்து வரும் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதில் ஜப்பான் அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ. எச். ஒ) தெரிவித்துள்ளது. அணு உலைகளில் மீண்டும் தீ விபத்து.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்றைய உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி 5, 321 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று 9, 329 பேர் காணாமல் போயுள்ளனர்.
இது தவிர, 463, 000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து 1.6 மில்லியன் பேரளவில் குடிநீர் வசதியின்றி தவித்து வருவதோடு 621, 439 வீடுகளில் மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 80, 422 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதோடு 4,798 கட்டிடங்களுக்கு முற்றாக சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment