3/31/2011

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பு *

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது.
2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் 29ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, கொலன்னாவ நகரசபை, மொரட்டுவ மாநகரசபை, கொடிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை, நீர்கொழும்பு மாநகர சபை, கம்பஹா மாநகரசபை, கண்டி மாநகர சபை, குண்டசாலை பிரதேச சபை, கண்டி, கங்கவட்ட கேந்திர பிரதேச சபை, மாத்தளை மாநகரசபை, நுவரெலியா மாநகரசபை, காலி மாநகரசபை, மாத்தறை மாநகரசபை, அம்பாந்தோட்டை மாநகர சபை, சூரியவெவ பிரதேச சபை, அம்பாந்தோட்டை பிரதேச சபை, கல்முனை மாநகர சபை, குருநாகல் மாநகரசபை, அனுராதபுரம் மாநகரசபை, பதுளை மாநகரசபை, இரத்தினபுரி மாநகர சபை போன்ற 22 உள்ளூராட்சி சபைகளும் இவ்வாறு பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளன

0 commentaires :

Post a Comment