ஐப்பானின் கிழக்குக் கரையோரப் பிரதேசமான ஹொன்ஷ¤ பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8.9 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்தப் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பெரும் பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதுடன், பெரும் எண்ணிக்கையான சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தத்தால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான அச்சம் காணப்படுகிறது.
சர்வதேச நேரப்படி அதிகாலை 5.46 மணியளவில் (ஜீ.எம்.ரி) இந்தச் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. சொத்துக்களுக்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள், படகுகள், கப்பல்கள் மற்றும் பல கட்டடங்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளன.
ஜப்பானின் தலைநகர் டோக்கி யோவிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கரையோரப் பிரதேசத்திலேயே சுனாமி தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் ஜப்பானின் பல்வேறு பிரதேசங் களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையிலேயே நேற்று சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுமார் 20 அடிக்கு மேலெழுந்து சுனாமி அலைகள் தாக்கி யுள்ளன. சுனாமி அனர்த்தத்துக்கு உள்ளான பிரதேசங்களிலுள்ள எரிபொருள் களஞ்சியங்கள், மின் உற்பத்தி நிலையங்களின் சில தீவிபத்துக் குக்குள்ளாகியுள்ளன. 4 மில்லியன் வீடுகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுனாமி அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களிலுள்ள அணு உலைகளிலிருந்து கதிர் தாக்கங்கள் எதுவும் வெளி யேறவில்லையென ஜப்பான் பிரதமர் நாடோ கான் தெரிவித்துள்ளதுடன், மக்களைப் பதற்றமடையாமல் அமைதியாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். சுனாமி அனர்த்தத்தால் ஜப்பானில் உயிரிழந்தவர்கள் பற்றிய சரியான தகவல்கள் உடனடியாக வெளியாகாத போதும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
20 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து ரஷ்யா, இந்தோனேசியா, குவான்டமாலா, எல். சல்வடோர், கொஸ்டா ரிக்கா போன்ற மத்திய அமெரிக்க நாடுகள், ஹவாய் தீவுகள் உட்பட 20 நாடுகளில் சுனாமி அனர்த்தம் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுனாமி அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. கடந்த 140 வருடங்களில் ஜப்பானில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி இதுவாகும். சுனாமியினால் உருவான 13 அடி உயர கடல் அலைகள் கட்டிட இடிபாடுகள், வாகனங்கள் மற்று படகு களை கடலுக்குள் இழுத்துச் செல்லும் காட்சிகளை ஜப்பானின் என். எச். கே. தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
ஒரு பாரிய கப்பலை சுனாமி அலைகள் கசனுமா நகரில் சுனாமி அலைகள் அலை தடுப்பு அணைக்கு(கிrலீak watலீr) நேரடியாக இழுத்துச் செல்லப் படுவதையும் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்த பயங்கர பூமியதிர்ச்சி ஏற்பட்ட 30 நிமிடங்களில் 7.3 ரிச்டர் அளவிலான மற்றொரு பூமியதிர்ச்சி அதே பிரதேசத்தை தாக்கியது. இந்த பூமியதிர்ச்சியையடுத்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ரஷ்யா, குவாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனீசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்துக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கும் விஸ்தரிக்கப்பட்டது. எனினும் இந்த எச்சரிக்கை சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை என்ற வகையிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
றிப்பிட்ட இப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை 7.2 ரிச்டர் களபிபான பூமியதிர்ச்சி இதே பிரதேசத்தை தாக்கியிருந்தது.
1933 இல் இதே பிரதேசத்தில் ஏற்பட்ட 8.1 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலகளாவிய ரீதியில் அதிர்வு பிரதேசங்களில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் அடிக்கடி பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதுண்டு.
6 ரிச்டர் அளவுக்கு மேல் இடம்பெறும் உலகளாவிய பூமியதிர்வுகளில் 20 சதவீதமானவை ஜப்பானிலேயே இடம்பெறுகின்றன.
1896 இல் சென்ரிகு நகரில் ஏற்பட்ட 8.5 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஜப்பானில் ஏற்பட்ட மிகவும் மோசமான பூமியதிர்ச்சி 1923 இல் ஏற்பட்டதாகும்.
இதில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அண்மையில் 1995 இல் கோபே நகரில் ஏற்பட்ட 6.9 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 5 ஆயிரத்து 502 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (10ம் திகதி) வியாழக்கிழமை சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட 5.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் காயமுற்றனர்.
உலகில் ஏற்பட்ட மிகவும் உயரமான சுனாமி அலை 1958இல் லிதுயா பேயில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 524 மீற்றர் (1742 அடி)
இதுபோன்ற இரண்டாவது மெகா சுனாமி வெஜோன்டாம் சுனாமியாகும். 1963 இல் ஏற்பட்ட இந்த சுனாமி அலையின் உயரம் 250 மீற்றர். (750 அடி) ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு விசேட தகவல் கருமபீடமொன்றை அமைத்திருப்பதாக வெளிவிவகாரா அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து அங்குள்ள தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டிரு க்கும் கருமபீடத்தை 0114719593, 0115743362, 0772267929 ஆகிய தொலை பேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதவிர டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் முதலாவது செயலாளர் சந்தன வீரசேன அவர்களைத் தொடர்புகொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள நிலைமைகளை வெளிவிவகார அமைச்சும், டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 commentaires :
Post a Comment