கடந்த 10 வருட காலத்தில் 116 பில்லியன் ரூபா நஷ்டமீட்டிய இலங்கை மின்சார சபை முதற் தடவையாக 5 பில்லியன் ரூபா இலாப மீட்டியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார்.
2010ல் மின்சார சபைக்கு 40 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுமென கணிப்பிடப்பட்டிருந்த போதும் நிதி முகாமைத்துவம், தொடர் மழை, குறுகிய கால செயற்திட்டம் என்பவற்றின் காரணமாக இலாப மீட்ட முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 2010 ஆம் ஆண்டில் 125,482 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது. சபையின் முழுச் செலவு 120, 420 ஆகும்.
1999 ஆம் ஆண்டிலே மின்சார சபை இறுதியாக இலாபமீட்டியுள்ளது. 2001ல் 9,201 மில்லியனும் 2008 ல் 33,869 மில்லியனும் 2009 ல் 11,210 மில்லியனும் மின்சார சபை நஷ்ட மீட்டியது. 2010ல் 40,000 மில்லியன் நஷ்டம் எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறு நஷ்டம் ஏற்பட்டிருந்தால் ஒவ்வொரு பிரஜைக்கும் 2 ஆயிரம் ரூபா நஷ்டத்தை தாங்க வேண்டி ஏற்பட்டிருக்கும். ஆனால் மின்சார சபை லாபமீட்டியதன் மூலம் மக்கள் மீதான மறைமுக சுமையில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இது தற்காலிக நிலையே, ஆனால் நிதி அடிப்படையில் எந்த நிறுவனத்திற்கும் கடனின்றி சொந்தக்காலில் நிற்கும் நிலையை உருவாக்குவதே எமது திட்டமாகும். 2016 ஆகும் போது இலாப மீட்டும் நிதி நிறுவனமாக மின்சார சபையை முழுமையாக மாற்றுவதே எமது இலக்காகும். இதற்கான 5 வருடத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கூடுதலாக மழை பெய்ததால் 47 வீதம் நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு முன்னர் 2000, 2001, 2006 ஆம் ஆண்டுகளிலும் இதேபோல அதிகூடுதலாக 47 வீதம் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
அதிகம் மழை பெய்தால்மின்கட்டணம் குறைய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். எவ்வளவு மழை பெய்தாலும் மொத்த மின் தேவையில் 50 வீதம்வரை மட்டுமே நீர் மின் உற்பத்தி செய்ய முடியும்.
1990ல் ஒரு அலகு மின்சாரம் 2.18 ரூபாவுக்கு விற்கப்பட்டது. 2008 முதல் கடந்த 3 வருடங்களாக ஒரு அலகு மின்சாரம் 13.10 ரூபாவுக்கே விற்கப்படுகிறது. கடந்த 3 வருடத்தில் அதிகரிக்காத ஒரே பொருள் மின்சாரம் மட்டுமே.
2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2010 ல் 1.19 வீதத்தினால் மின்சார விரயத்தை குறைக்க முடிந்தது. சுற்றிவளைப்புகள் மூலம் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்றவர்களிடமிருந்து 2010 ல் 2 ஆயிரம் மில்லியன் ரூபா தண்டம் அறவிடப்பட்டது என்றார்.
லெக்கோ மோசடி
மின்சார தனியார் நிறுவனமான லெக்கோவில் இடம்பெற்ற மோசடி குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இது குறித்த விசாரணைகள் பல மட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து கம்பனிப் பதிவாளர் நாயகம், லஞ்ச ஊழல் திணைக்களம், சி. ஐ. டீ. என்பவற்றுக்கு அறிவித்துள்ளோம் என்றார்.
இங்கு மின்சார சபை தலைவர் அமரபாலவும் உரையாற்றினார்.

0 commentaires :
Post a Comment